சென்னை

கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய உளவுத்துறை வலியுறுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் மத கூட்டரங்கில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியா முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  இதனால் கேரளாவுக்கு அண்டை மாநிலமான தமிழகத்தில் மிகவும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழக மாநில உளவுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை துணை ஆணையர் மற்றும் ரயில்வே ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

உளவுத்துறை அந்தகடிதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தெரிவித்துள்ளது.  அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய இடங்கள், தூதரகங்கள், சுற்றுலா தளங்கள் ஆகிய இடங்களைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.