தனித்து விடப்பட்ட “தனி ஒருவன்” கம்பெனி!

Must read

s

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உட்பட பலர் நடித்த ‘தனி ஒருவன்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர்கள்சங்கம் தடை விதித்துள்ளது.

ஒவ்வொரு படத்துக்கும் இவ்வளவுதான் விளம்பர செலவு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

ஆனால் அதை பொருட்படுத்தாமல்,  தனி ஒருவன்   படம் வெளியான போது, வெளியானபோதுமுன்னணி தொலைக்காட்சி, நாளிதழ்கள், எப்.எம்.கள் என அனைத்திலும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் விளம்பரம் செய்தது.   ஆகவேதான் தடை.

“ இனிமேல் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை “என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்க நடவடிக்கை  வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பாகஅர்ச்சனா கல்பாத்திம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும், , “தனி ஒருவன்’ படத்தினைவிளம்பரப்படுத்தியதற்காக ஏ.ஜி.எஸ் நிறுவனம் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க தடை விதித்திருப்பதுஅதிர்ச்சியாக இருக்கிறது” என்றும் தெரிவித்திருக்கிறார்.

More articles

Latest article