அடிமைகளாக பெண்கள் விற்பனை
அடிமைகளாக பெண்கள் விற்பனை

பெண்களை பலாத்காரப்படுத்துவதற்கான “நெறிமுறைகள்” குறித்த விதிமுறை கையேட்டை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஈராக், சிரியா மற்றும் ராக்கா, மசூல் உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரிய அளவிலான நிலப்பரப்பபை தக்க வைத்துள்ள பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ், பெண்களை பிடித்து அடிமைகளாக்கி, தங்களது செக்ஸ் தேவைகளை தீர்த்துக்கொள்வதும், அவர்களை விலைக்கு விற்பதும் ஏற்கெனவே அம்பலானது.  அந்த பெண் அடிமைகளிடம்  தனது உறுப்பினர்கள்  செக்ஸ் ஆர்வத்தை எப்படி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய விதிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது.  இந்த கையேட்டை கடந்த ஜனவரி மாதமே அமெரிக்கா நடத்திய சிறப்பு ஆபரேஷனில் கைப்பற்றியுள்ளது. எனினும் இந்த கையேட்டு விபரங்களை தற்போது தான் வெளியிட்டுள்ளது.

விதிமுறைகளில் சில….

* மாத விடாய் காலம் முடிந்து சுத்தமாகும் வரை பெண்ணின் உரிமையாளர் உடல் உறவு கொள்ளக் கூடாது.

* கர்ப்பமாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரை உடல் உறவு கொள்ளக் கூடாது.

* கர்ப்பமாக இருக்கும் போது அபார்ஷன் செய்ய அனுமதிக்க கூடாது.

* சிறைபிடிக்கப்பட்ட பெண்ணை அவர் மட்டுமே உடல் உறவு கொள்ள வேண்டும். மற்றவர்களை உடல் உறவு செய்ய அனுமதிக்க கூடாது.

* அடிமையாக்கப்பட்ட பெண்ணுக்கு செக்ஸ் உறவு கொள்ளத் தக்க வகையில் மகள் இருந்தால் அதில் யாராவது ஒருவருடன் மட்டுமே செக்ஸ் உறவு கொள்ள வேண்டும்.

* இரண்டு சகோதரிகளின் உரிமையாளர் யாரேனும் ஒருவருடன் தான் உறவு கொள்ள வேண்டும். மற்றொருவரை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். முடியாதவர் அவரை விற்றுவிட வேண்டும்.

* தந்தை அடிமையாக வாங்கிய பெண்ணை, மகன் உறவு கொள்ளக் கூடாது.

பிடித்துச்செல்லப்படும் "அடிமைப்" பெண்கள்
பிடித்துச்செல்லப்படும் “அடிமைப்” பெண்கள்

 

* தந்தை உடல் உறவு கொண்ட பிறகு, அந்த பெண்ணை தனது மகனுக்கு கொடுக்கலாம் அல்லது விற்பனை செய்துவிடலாம். அதன் பிறகு தந்தை தொடர்ந்து அந்த பெண்ணுடன் உடல் உறவு கொள்ளக் கூடாது.

* அடிமையாக்கப்பட்ட பெண் கர்ப்பம் அடைந்தால் அவரை விற்பனை செய்ய கூடாது. அவர் இறந்த பிறகு அந்த பெண்ணை விடுவித்துவிட வேண்டும்.

* பெண்ணை ஒரு உரிமையாளர் விடுவித்த பிறகு அவருடன் செக்ஸ் கொள்ளக் கூடாது. விடுவித்த பிறகு அந்த பெண் அவரது சொத்து கிடையாது. இவை உள்பட 15 அம்சங்கள் அந்த கையேட்டில் நிறைந்துள்ளது.

இது உலக அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.