டில்லி

இன்று டில்லி நகரில் அதிக பட்ச வெப்பமாக 48 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

நாடெங்கும் தற்போது கோடை கடுமையாக உள்ளது. வட மாநிலங்களில் பல இடங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு பகுதியில் இந்த வருடத்துக்கான அதிக அளவு வெப்பம் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தலைநகர் டில்லியில் அதிக அளவு வெப்பம் பதிவாகி உள்ளது.

நேற்று டில்லியில் உள்ள பாலம் வானிலை ஆய்வு மையத்தில் 47.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. இன்று அது மேலும் அதிகரித்து 48 டிகிரி செல்சியஸ் ஆகி உள்ளது. இதற்கு மேற்கு பகுதியில் இருந்து வீசும் வெப்பக் காற்று காரணம் என கூறப்ப்டுகிறது. இது மேலும் இரு தினங்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையம், “இன்னும் இரு தினங்களுக்கு பிறகு தென் மேற்கு காற்று வீசக்கூடும். அவ்வாறு வீசும் போது தற்போதைய வெப்ப நிலையில் இருந்து இரண்டு அல்லது மூன்று டிகிரி வெப்பம் குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அனல் காற்று தொடர்ந்து வீசும்.” என தெரிவித்துள்ளது.