டிஜிபி ஆர்.நடராஜ் நீக்கத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா

Must read

nataraj ips

 

சென்னை:

ஆள் மாறாட்டம் காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ்  மீதான நடவடிக்கையை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளார்.

நேற்று தந்தி டிவியில், அதிமுக அரசை விமர்சித்து பத்திரிகையாளர் ஆர். நடராஜ் பேட்டி அளித்தார். அப்போது, தவறுதலாக முன்னாள் டி.ஜி.பி. நடராஜின் புகைப்படம் காண்பிக்கப்பட்டுவிட்டது.

இதனால் அவர்தான் அ.தி.மு.கவை விமர்சித்தான் என்று நினைத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர், அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.

தற்போது உண்மை தெரிந்து, நீக்க நடவடிக்கைையை ரத்து செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” நடராஜ் நீக்கம் குறித்து கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.  ஆர்.நடராஜ் தொடர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக செயல்படுவார்” என்று ஜெயலலிதா அறிவித் துள்ளார்.

More articles

Latest article