ஜீவாவை சங்கடப்படுத்திய டி.ஆர்.!

Must read

download (1)
ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள போக்கிரி ராஜா படத்தின் பாடல் வெளியீடுசென்னையில் நடந்தது.
படத்தின் ஹீரோ ஜீவா, ஹீரோயின் ஹன்சிகா ஆகியோருடன், திடீரென டி.ஆர், மேடை ஏறினார்.  வழக்கம்போல அதிரடி பேச்சுத்தான்.
“வாலு’ படத்தை பல இடையூறுகளுக்கு பிறகு நானே சொந்தமாக வெளியிட்டேன். அந்தப் படத்திற்காகதாறுமாறு என்ற பாடலில் நடிக்க ஹன்சிகாவை அணுகினோம்.   எந்த மறுப்பும் சொல்லாமல் வந்துநடித்துக் கொடுத்தார் ஹன்சிகா.  அதற்காக அவர் தனி சம்பளம் கூட அவர்  கேட்கவில்லை. “ டி.ஆர்.அங்கிள் கேட்டால் மறுக்க முடியுமா”  என்று மட்டும் கேட்டுவிட்டு வந்து நடித்துக் கொடுத்தார். அப்படி ஒரு  குழந்தை மனம் கொண்டவர் ஹன்சிகா” என்றவர், “ உடனே, நான் வேறு யாரையோ மனதில் வைத்து பேசுகிறேன்” என்று நினைத்துவிடாதீர்கள் என்று கேப் விட்டார்.
நயன்தாராவைத்தான் மறைமுகமாக சாடுகிறார் என்பது தெரியாதா என்ன?
முன்னதாக ஜீவா பேசும்போது, “நானும் டி. ஆர் சார் ஒரே தெருவில் தான் வசிக்கிறோம். ஆனால்பேசிகொண்டதே இல்லை”  என்று கேஷூவலாகத்தான் சொன்னார்.
அதைப் பிடித்துக்கொண்டார் டி.ஆர்.
“ஜீவா…  நீங்களும் நானு ஒரே தெருவில் தான் இருக்கிறோம் ஆனால் பேசுனதே இல்லை என்று பேசினீர்கள். அதற்கு காரணம் உங்களுக்கு என்னிடம் பேச மனம் இல்லை.  அதனால் தான் நீங்கள் பேசவில்லை “என்றெல்லாம் போட்டுத்தாக்க ஆரம்பித்தார்.
பாவம் ஜீவா..  சங்கடத்துடன் சிரித்துக்கொண்டிருந்தார்!

More articles

Latest article