201401301434190201401301434196_l

தமிழ் நாடு :
ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த சில வழிகாட்டுதல்களை வகுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ ஜவடேஹர் தலைமையிலான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்:
நிபந்தனை 1. கரடி, சிங்கம், புலி, சிறுத்தை, குரங்கு ஆகிய விலங்குகளை விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளின் பயன்படுத்தக் கூடாது. இதில் தற்போது காளைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, புதிய விதிமுறைப்படி விளையாட்டு தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ள காளைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
நிபந்தனை 2. எந்தெந்த மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறதோ அங்கு மட்டுமே ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். கலெக்டர் அல்லது மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
நிபந்தனை 3. மாட்டு வண்டி பந்தயம் தரமான வழிதடத்தில் நடத்த வேண்டும். பந்தய தூரம் 2 கி.மீ.,க்கு மேல் இருக்க கூடாது.
நிபந்தனை 4.காளை முறையாக கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் மூமம் பரிசோதனை செய்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிந்தனை 5. போதை பொருட்களை எந்த ரூபத்திலும் காளைகளுக்கு வழங்க கூடாது.
நிபந்தனை 6. விலங்குகளை துன்புறுத்தலில இருந்து பாதுகாக்கும் சட்டத்தில் தெரிவித்துள்ள 5 சரத்துக்களையும் இந்த போட்டியின் போது பின்பற்ற வேண்டும்.
நிபந்தனை 7. விலங்குகளை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் அமைப்பு போட்டியை கண்காணிக்க வேண்டும். காளைகளுக்கு வலி ஏற்படுத்துதல், பாதிப்பை ஏற்படுத்துதல் என எந்த வகையிலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.