ஜனாதிபதிக்கு வயதாகலாம், பீசிசிஐ நிர்வாகிக்கு ஆகக்கூடாதா? ; நிரஞ்சன் ஷா

 

டில்லி

ழுவது வயதை தாண்டியவர் ஜனாதிபதி ஆகும் போது, பிசிசிஐக்கு நிர்வாகி ஆககூடாதா என நிரஞ்சன் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்

வயது காரணமாக பிசிசிஐ நிர்வாகியாக பதவி வகிக்ககூடாது என நிரஞ்சன் ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டது.  அவர் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில் இப்படி கேட்டுள்ளார்.

அவர் கூறியதாவது :

”பிசிசிஐ நிர்வாகிகள் நியமனத்துக்கு எதற்கு வயதைக் குறித்து இத்தனை சர்ச்சைகள் என்பது விளங்கவில்லை.  எழுவது வயதைக் தாண்டியவர்களால் சரிவர பணி புரியமுடியாது எனச் சொல்லப்படுகிறது.   ஒரு ஜனாதிபதி (பிரணாப் முகர்ஜி) தனது 81 வயதிலும் பணிபுரிய முடியும் என நம்பப்படும் போது பிசிசிஐ நிர்வாகிகளுக்கு மட்டும் 70 வயதுக்கு மேல் பணி புரியக்கூடாது என்னும் கட்டுப்பாடு ஏன்?   ஒரு நாட்டுக்கே தலைவராக இருப்பதை விட இது கடினமான பணியா?   பணி புரிய உடலும் மனமும் ஒத்துழைக்கும் வரையில் பணி புரியலாம்”

இவ்வாறு நிரஞ்சன் ஷா கூறினார்.


English Summary
Niranjan shah questioned that when president is an elderly person why not BCCI administrator