சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

Must read

சென்னை:
சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரிந்து வந்த பிரேக்கிங் செய்தி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது. முன்னதாக பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 24 வயது பத்திரிகையாளருக்கும், பிரபல தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வரும் ராயபுரத்தில் தங்கியிருந்த உதவி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இவர்கள் அனைவரும் கடந்த மாதம் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இவர்கள் 27 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்லதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article