சென்னையில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் : மாநகராட்சி அறிவிப்பு 

Must read

சென்னை

சென்னை நகரில் குப்பைகள் கொட்டுவோருக்கு ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை நகரில் நாளுக்கு நாள் குப்பைகளின் அளவு அதிகரித்து வருகிறது.   இதைக் குறைக்கச் சென்னை மாநகராட்சி பல நடவடிக்கைகள் எடுத்தும் இது குறையவில்லை.  குப்பைகளை அழிக்க அல்லது மறு சுழற்சி செய்யச் சென்னை மாநகராட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது.  தற்போது குப்பைகள் கொட்டுவதை குறைக்கச் சென்னை மாநகராட்சி அபராதம் விதிக்க உள்ளது

அதன் விவரங்கள் வருமாறு

  • பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை எறிந்தால், ரூ.500 அபராதம்
  • வாகனத்தில் இருந்து குப்பைகளை எறிந்தால் ரூ.500 அபராதம்
  • தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டினால் ரூ.100 முதல் ரூ. 5000 வரை அபராதம்
  • கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் ஒரு டன்னுக்கு ரூ.2000 மற்றும் அதற்கு மேற்பட்டால் ரூ.5000 அபராதம்
  • மரக் கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ரூ.200 அபராதம்
  • கழிவுநீர் மற்றும் கால்வாய் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டினால் ரூ.500 அபராதம்
  • திடக்கழிவுகளை எரிப்பவருக்கு ரூ.500 முதல் ரூ. 1000 வரை அபராதம்

என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article