1

ருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் உச்சத்துக்கு போன சிவகார்த்திகேயன் உச்சகட்ட வருத்தத்தில் இருக்கிறார். அந்த படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவா நடித்த ரஜினி முருகன் படம் முடிந்து திரையிட தயாராக இருக்கிறது.

இயக்குநர் லிங்குசாமியின் தாயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் இது. ஏற்கெனவே லிங்கு தயாரித்த உத்தமவில்லன், ஏற்படுத்திய நட்டம், ரஜினி முருகன் பட ரிலீசையும் பாதித்தது. இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் படம் வெளியாகாமல் போனது.

இதனால் சிவகார்த்திகேயன் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார். “இப்போ நான் நடித்துக்கொண்டிருக்கும் படம் ரிலீசாக நாளாகும். ஆகவே இடைவெளி அதிகரித்துவிடும். உடனடியாக ரஜினி முருகன் படத்தை வெளியிடுங்கள்” என்று லிங்குவிடம், கோரிக்கை வைத்தார் சிவா. அதற்கு லிங்குவும், “கவலைப்படாதீர்கள்.. தீபாவளிக்கு ரிலீஸ் செய்துவிடலாம்” என்று உத்தரவாதம் கொடுத்தார்.

இப்போதோ படத்தை தீபாவளிக்கும் ரிலீஸ் செய்ய முடியாத நிலை.

அதனால், “வர்ற தீபாவளி எனக்கு துக்க தீபாவளி” என்று நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.