sirai sengal

சிறைவாசிகள், விடுதலை ஆன பிறகு உதவும் வகையில் பலவித கைவினை தொழில்களை சிறையில் கற்றுத் தருகிறார்கள். அந்த சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு, அதிலிருந்து அவர்களுக்கு பணமும் கிடைக்கிறது.

ஆரம்ப காலத்திலிருந்து குறிப்பிட்ட சில தொழில்களே கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தன. கடந்த கடந்த, 2013ம் ஆண்டு,தமிழக சிறைகளில், ‘சிறை பஜார்’ திட்டம் துவங்கப்பட்டது. இதன்படி, சிறை கைதிகள் மூலம், உணவகம், டீக்கடை, காய்கறிஅங்காடி மற்றும் முடி திருத்தகம் என துவங்கி, அழகு நிலையம் வரை நடத்தப்படுகின்றன.

இதன் அடுத்த கட்டமாக, “தமிழகத்திலேயே முதல் முறையாக, , வேலுார் மத்திய சிறையில் செங்கல் சூளை துவக்கப்பட்டுஇருக்கிறது” என்ற அறிவிப்பு  வந்திருக்கிறது.

வேலுார் சிறைத்துறை டி.ஐ.ஜி., முகமது ஹனீபா கூறியதாவது:செங்கல் தயாரிப்பு குறித்து, நன்னடத்தை கைதிகள், ஐந்து பேருக்கு,முதல்கட்டமாக பயிற்சி தரப்பட்டுள்ளது. அவர்கள் மூலம், நாளொன்றுக்கு, 500 செங்கற்கள் தயாரிக்கப்படும்.

:மொத்தம், 30 ஆயிரம் செங்கற்கள் தயாரிக்கும் வகையில், இங்கு செங்கல் சூளை அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இது கண்டிக்கத்தக்கது.

சிறைவாசம் என்பது தண்டனைதான். ஆனால் அங்கிருப்போருக்கு கடும் வேலை எதுவும் அளிப்பது முறையல்ல, நாகரிகமல்ல.  அதிகஉடல் உழைப்பு தேவைப்படாத, உடலை வருத்தாத பணிகளில் சிறைவாசிகளை ஈடுபடுத்தலாம். செங்கல் சூளை தயாரிப்பு, அதுவும்அனல் காற்று அதிகம் வீசும் வேலூரிலா?  . அதுவும் மிகக் குறைவான ஊதியம்தான் கொடுப்பார்கள். கூலி போதாது என்று சொல்லக்கூட சிறைவாசிகளுக்கு உரிமை இருக்காது. இதன் மூலம் நல்ல வருவாய் வந்தால், அதை  அனுபவிக்கப்போவது அரசும்அதிகாரிகளும்தான்.

என்ன சுய தொழில் பயிற்சி, யாரை ஏமாற்ற? விடுதலை ஆன பிறகு செங்கல் சூளைகளில் போய் வேலை செய்யவா?  அங்கு நிலவும்கொடுமைகள் குறித்து நிறைய எழுதியாயிற்று. இந்தத் திட்டம் கண்டிக்கத்தக்கது.

இப்படிப் பட்ட முடிவுகள் எந்த மட்டத்தில் எடுக்கப்படுகின்றன.?

மனித உரிமை ஆர்வலர்கள் கடுங் கண்டனம் தெரிவிக்கவேண்டும்: இத் திட்டம் கைவிடப்படவேண்டும்.