திருப்பூர்:
தினோரு வயது சிறுவன் கல்லால் தாக்கியதில் ஆறு வயது சிறுவன் பலியான கொடுமை திருப்பூரில் நடந்திருக்கிறது.
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான   கதிரவன் மெட்ரிக் பள்ளியில் 6- ஆம் வகுப்பு மாணவன் பங்கஜ்குமார். அதே  பள்ளியில் 1-ஆம் வகுப்பு படிப்பவன் சிவராமன்.
இருவரும் இன்று பள்ளியில் விளையாடும்போது சண்டை மூண்டிருக்கிறது. இதையடுத்து பங்கஜ்குமார், கற்களால் சிவராமனை கடுமையாக தாக்கியிருக்கிறாரன். இதனால் சம்பவ இடத்திலேயே சிவராமன் பலியானான்.
சிறுவன் சிறுவனைத் தாக்கிக் கொன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
“சிறுவர்கள் மனதில் இத்தனை வன்மம் இருக்குமா.. திரைப்படம், டிவி போன்ற ஊடகங்களில் காட்டப்படும் வன்முறை காட்சிகளே சிறுவர்கள் மனதில் விஷத்தை விதைக்கின்றன. குறிப்பாக டிவிக்களில்  நிறைய வன்முறை காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. அவை தங்கு தடை இன்று வீட்டுக்குள் வந்துவிடுகின்றன. சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களுக்கான தெலைக்காட்சி சேனல்களிலும் வன்முறைகாட்சிகள் அதிகம் இருக்கின்றன. ஆகவே டிவிக்கும் சென்சார் வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.