பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து அதிகாரபூர்வமாக பேச வேண்டியவர்கள் மட்டுமே பேச வேண்டும். அனைவரும் ஆளாளுக்கு பேசி தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என்று தனது அமைச்சரவை சகாக்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை கூறியுள்ளார்.

modi_audio

அமைச்சர்களும் பாஜகவினரும் ஒருபக்கம் சர்ஜிகல் ஸிடிரைக்கைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில் பாகிஸ்தான் சர்ஜிக்கல் ஸ்டிரக் எதுவும் நடைபெறவில்லை என்றும் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு மட்டுமே நடைபெற்றதாகவும் சொல்லி சமாளித்து வருகிறது. ஆனால், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் சர்ஜிக்கல் நடைபெற்றதாக கூறப்படுவதை பாகிஸ்தான் மறுத்து வருவதாகவும் பாகிஸ்தானின் கூற்றை பொய்யாக்கும் வகையில் வீடியோ ஆதாரம் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இது மேலும் சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது. “நீங்கள் ராணுவத்தையே சந்தேகிக்கிறீர்ளா? உங்களுக்கு ஏன் ஆதாரம் தரவேண்டும் என்று பாஜகவினர் ஒரு பக்கம் பொங்க, ஆதாரம் தரவேண்டுமா வேண்டாமா என்ற ஒரு புது சர்ச்சை இப்போது உண்டாகியிருக்கிறது.எனவேதான் சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி பேசி தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என்று சொல்லி பிரதமர் தனது அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.