புதிய பகுதி: இணைய தளபதிகள்:
ட்சிக்காக போராட்டங்களில் கலந்துகொள்வது, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது மட்டுமே தொண்டர்களின் பணி என்பது  இன்று மாறியிருக்கிறது.சமூக இணையதளங்களில் தங்களது கட்சிக்கான குரலாக ஒலிப்பதும் முக்கிய பணியாக ஆகிவிட்டது. அப்படி ஒவ்வொரு கட்சிக்கும் தளபதிகளாய், சமூகவலைதளங்களில் கருத்துப்போர் இடுபவர்கள் பலர். அவர்களில் சிலரது பேட்டிகள் இந்த பகுதியில் தொடர்ந்து வெளியாகும்.ஏற்கெனவே ம.தி.மு.க. சார்பாக எழுதும் ஜி. துரை மோகன்ராஜு பேட்டி வெளியானது. இப்போது தி.மு.க. சார்பாக களமாடும் கோதண்டராமன் சபாபதி அவர்களின் பேட்டி:
 
Untitled-6
 
 
அரசியல் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? 
 என் அண்ணன் (பெரியப்பா மகன்) உதயம் நற்பணி இயக்கத்தின் தலைவர். கிட்டத்தட்ட அது ஒரு வருத்தப்படா வாலிபர் சங்கம்தான் அது. ஆனாலுல்  திமுக சார்ந்ந அரசியல் செயல்பாடுகளிலும் ஊரின் நல்லது கெட்டதுகளிலும் முன் நிற்பார்கள்.என் அடுத்த வீட்டு மாமா திமுக கிளைச்செயலாளர்.அவர்களோடு கொடி பிடித்தல் போஸ்டர் ஒட்டுதல் பூத் சிலிப் எழுதிக்கொடுத்தல் என்று என் அரசியல் ஆரம்பம் ஆனது என்றாலும் அதிக பிடிப்பில்லை. 
எங்கள் ஊரில் புதிகாக பள்ளிக்கூடம் அமைப்பதிற்கு எங்கள் ஊராட்சிமன்றத்தலைவர் மு.வை.கணேசன் திமுக மாவட்டப்பிரதிநிதி சோ.ரவிச்சந்திரன் ஆகியோர் எடுத்த அரசியல் முன்னெடுப்புகளில் ஈர்க்கப்பட்டேன். பின்னாளில் அதே பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அவர்கள் முயற்ச்சி மேற்கொண்டபோது என் பங்கிற்கு நான் அப்போதைய
குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு கடிதம் எழுத அது மாவட்ட கல்வி அலுவலகத்தில் பேசப்பட கூட்டத்தோடு கூட்டமாக நின்ற நான் கவனிக்கப்பட்டு முக்கிய முடிவெடுக்கும் கூட்டத்தில் ஒருவனாக்கப்பட்டேன்.  
தி.மு..மீது ஈடுபாடு ஏற்பட காரணம் என்ன?
 சிறுவயதில் எம்ஜிஆர் படங்கள் நிறைய பார்ப்பேன். என்றாலும் சிறு வயதுமுதலே வாசிக்கும் பழக்கமுமம் இருந்தது.குங்குமம் முரொசொலி போன்றவை வாசித்திருக்கிறேன்.தவிர தினமணி தினத்தந்தி போன்ற நாளிதழ்களையும் விடுவதில்லை.இவை மூலம் நானறிந்த கலைஞர்..  அவர் தமிழகத்துக்கு செய்த நன்மைகள் பிடித்துப்போனதால் திமுகவும் பிடித்துப்போனது. கலைஞர் விபிசிங் இருவரும் கூட்டணி கண்டபோது இருவரும் இணைந்திருக்கிற படத்தை ஆர்வமாக வரைந்திருக்கிறேன். ஊருக்கு ஏதேனும் நல்லது என்றால் அது மேலே நான்குறிப்பிட்ட திமுககாரர்களாலேயே நடந்தது அதுவும் திமுகமீது ஆர்வம் அதிகமாக ஒரு காரணம். துக்ளக் பத்திரிக்கையும்கூட வாசித்ததுண்டு.ஆனால் அது எந்த வகையிலும் திமுக மீதான என் ஆர்வத்தை குறைக்கவில்லை.  
நீங்கள் எழுதி அதிம்பேர் படித்த பதிவு எது?
சமீபத்தில் வெளியாகிய விசாரணை படத்தின் கதைபோன்ற ஒரு சம்பவத்தை வைத்து நான் எழுதிய ஒரு பதிவு அதிகமாக படிக்கப்பட்டது.
பிறர் எழுதுவதில் நீங்கள் விரும்பிய பதிவு என்ன?
குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சிவசங்கர் எஸ்.எஸ். அவர்கள்  சரஸ்வதி தினத்தன்று ஒரு பதிவு எழுதினார். எல்லோருமே சரஸ்வதி என்கிற மூடநம்பிக்கை பற்றி எழுத அவர் பகிஸ்தானில் முஸ்லீம் பெண்கள் கல்விக்காக போராடி தாக்குதலுக்கு ஆளாகிய மலாலா பற்றி எழுதினார்.அருமையான பதிவு. அவரது பதிவுகள் எல்லாமே அருமை. அதில் இந்த பதிவு மிகவும் பிடித்துப்போய்விட்டது.  
உங்களது பதிவுகளுக்கு வரும் கடுமையான பின்னூட்டங்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள், பதில் அளிக்கிறீர்கள்?
தனிநபர் தாக்குதல்கள் வந்ததில்லை.பதிவு சார்ந்த விமர்சனங்களை நான் அதிகம் விரும்புவேன்.என் தரப்பு விளக்கத்தை சொல்வேன்.
உங்கள் பதிவு சர்ச்சைக்குள்ளானது உண்டா ?
இல்லை.என் பதிவிலேயே விவாதம் நடப்பது உண்டே தவிர, சர்ச்சை என்று ஆனதில்லை.  .ஈழம், அலைக்கற்றை ஒதுக்கீடு போன்றவை பற்றி எழுதும்போது சிறிய விவாதம் நடக்குமே தவிர சர்ச்சை ஆனதில்லை. 

எஸ்.எஸ். சிவசங்கர்
எஸ்.எஸ். சிவசங்கர்

உங்கள் பதிவை கட்சி முக்கியஸ்தர்கள் படித்து கருத்து சொல்லியிருக்கிறார்களா?
குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான அண்ணன் சிவசங்கர் எஸ்.எஸ்.அவ்வப்போது என் பதிவூகளை படித்து கருத்து சொல்வார். கலைஞர் பிறந்தநாள்
விழாவிற்காக நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் பங்குபெற்று முதலிடம்பிடித்த கட்டுறையை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு பாராட்டினார்.நான் மிகவும் மகிழ்ந்த நாள் அது.
 சமூக இணையதளத்தில் எழுதுவது கட்சிக்கு ஓட்டாக மாறுமா? 
அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை கண்டு அஞ்சுகின்றன. முதல்வர் வாட்சப்வரை வந்துவிட்டார். கலைஞர் முகநூலில் தொடர்ந்து எழுதுகிறார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தல்வரை  சமூகவலைதள எழுத்து ஓட்டாக மாறவில்லை என்பதே என் கணிப்பு.அல்லது அது ஒரு பெரிய பாதிப்பை உணரச்செய்யும் அளவில் இல்லை என்றே சொல்லலாம்.
ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அந்த அளவு கூடுதலாகும் என்று நினைக்கிறேன்.கூடுதலாகுமே தவிர சமூக வலைதள எழுத்துக்கள் ஆட்சியை மாற்றவல்ல பெரும் சக்தி என்கிற அளவினை எட்டிவிடாது. அந்த அளவு இணையப்பயன்பாடு இன்னும் வளரவில்லை.
 இணையதள சண்டைஊரில் நடக்கும் கட்சி சண்டை ஒப்பிடுங்களேன்.. 
இணையதளத்தில் ஒருவர் நம்மிடம் சண்டை போட்டார் என்றால், அவரது  கட்சிசாராத வேறொரு பதிவுக்கு  விருப்பம் தெரிவித்துகூட அவரை சமாதானப்படுத்தி விடலாம்.  “நான் மற்ற விஷயங்களில் உங்களைப்போல்தான்” என்று நம் கருத்தை மற்றொரு பதிவில் இணைய உலகத்திற்கு சொல்லிவிடலாம். 
ஆனால் (கட்சி சார்ந்த)  ஊர்ச்சண்டையில் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை சொல்லவோ கேட்கவோ அவகசமோ வாய்ப்போ கிடைக்காது. கைககலப்பில்கூட போய்முடியும். வீண் அபவாதம் ஏற்படும். எனக்கு கொஞ்சம்கூட  சம்மந்தமே இல்லாத வியங்களில்கூட குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறேன்.நெருங்கிய நட்பு உறவுகளைக்கூட அரசியலால் இழந்திருக்கிறேன்.தந்தை மகனைக்கூட அரசியல் பிரிக்கிறது. உண்மையில் அது அரசியலே அல்ல. ஈனத்தனம்.  .நானும் எனக்கு அரசியல் கற்றுத்தந்த உள்ளுர் தலைவர்களும் அதை விரும்பியதே இல்லை. 
ஆனாலும் ஏதோ ஒரு பக்கத் தவறுகளால் இது தொடரவே செய்கிறது. இந்த பிரச்சனைகள் இணைய சண்டையில் இல்லை.