கோஹினூர் வைரம் வேண்டாம்.. இரண்டு கருப்பு வைரங்களைக் கொடு!

Must read

விஜய்மல்லையா, லலித்மோடி,
விஜய்மல்லையா, லலித்மோடி,

புகழ் பெற்ற கோஹினூர் வைரம், இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு பல காலம் ஆகிவிட்டது.  ஆனால் இப்போதும், அந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல் அங்கங்கே எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில்கூட வழக்கு தொடுக்கப்பட்டது. மத்திய அரசோ, “அந்த வைரத்தை இங்கிலாந்து வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லவில்லை. அந் நாட்டு அரசிக்கு அன்பளிப்பாகத்தான் வழங்கப்பட்டது” என்று கூறியது.
இந்த நிலையில் சமூகவலைதங்களில் கோஹினூர் வைரம் பற்றி பரவும் பதிவு ஒன்று அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
அந்த பதிவு இதுதான்:
“இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை இங்கிலாந்தே வைத்துக்கொள்ளட்டும். இங்கிருந்து தானாக சென்ற லலித்மோடி, விஜய் மல்லையா ஆகிய இரு கறுப்பு வைரங்களை மட்டும் திருப்பித் தந்தால் போதும்.. இந்தியா வளமாகும்”
இது எப்படி இருக்கு?

More articles

Latest article