கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை: எடப்பாடி அலறல்

Must read

சென்னை:

ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்திற்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றில், தெஹல்கா செய்தி இணையதள ஊடகவியலாளர் ஒருவர் பேசும்  பிரத்யேக வீடியோ ஒளிபரப்பாகியது. அதில்,  கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவத்திற்கும் முதல்வர் எடப்பாடிக்கும் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டது. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று  சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் ஏற்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. இந்த  ஆலோ சனையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி கள் பங்கேற்றனர்.

கொலை, கொள்ளை சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை: எடப்பாடி அலறல்

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  நேற்றைய தினம் தெஹல்கா பத்திரிக்கை முன்னாள் ஆசிரியர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கோடநாடு சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளார்கள் கோடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள் மீதும், அதற்கு பின்புலத்தில் இருப்ப வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் குறுக்கு வழியை கையாள் கிறார்கள்,  கோடநாடு சம்பவம் குறித்த வீடியோ வெளியீட்டில் அரசியல் பின்புலம் உள்ளது, குறுக்கு வழியை கையாண்டு அதிமுக அரசை எந்த காலத்திலும் கவிழ்க்க முடியாது என்றவர்,   கோடநாடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒன்றரை ஆண்டுகளாக 22 முறை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்

நீதிமன்றத்தில் ஏதும் சொல்லாதவர்கள் தற்போது ஏதோ புதிதாகச் சொல்லி வழக்கை திசைதிருப்ப பார்க்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் கூறினார்.

ஜெயலலிதா எந்த ஒரு நிர்வாகியிடமும் எந்த ஒரு ஆவ ணத்தையும் எப்போதும் பெற்றதில்லை என்றும்,  ஜெயலலிதா மீது களங்கம் கற்பிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

திமுகவைப் பொறுத்தவரை என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடர்ந்து கொண்டே யிருக்கிறார்கள் என்றவர்,  பொங்கல் பரிசு, முதலீட்டாளர் மாநாட்டுக்கு எதிராகவும் திமுகவினர் வழக்கு தொடர்ந்தனர் என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல் தடைபடுவதற்கு அதிமுக காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது தவறான தகவல் என்ற முதல்வர்,  உள்ளாட்சித் தேர்தல் தடைபடுவதற்கு திமுகவே காரணம், அவர்கள் வழக்கு தொடர்ந்ததன் காரண மாகவே உள்ளாட்சி தேர்தல் தடைபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் ஊராட்சி சபை கூட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகம்  நடத்தி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

More articles

Latest article