download
கொச்சி: நடிகர் கலாபவன் மணி கொலை செய்யப்பட்டிருக்கிலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது உடலில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேரள காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மறைந்த நடிகர் கலாபவன் மணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் மரணமடைந்த மறுநாளே அவரது சகோதரர், “கலாபவன் மணி கொலை செய்யப்பட்டிருக்கலாம்” என்ற சந்தேகத்தை கிளப்பி காவல்துறையில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து காவல்துறையினர், தீவிர விசாரணையில் இறங்கினர்.. மரணத்திற்கு முன்பும், மரணம் சம்பவித்த சமயத்திலும் கலாபவன் மணியுடன்  இருந்த மூன்று உதவியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
கலாபவன் மணியின்  உடல்  பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட போது, அவரது உடலில் விசம் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  குளோரோபைரிபாஸ் என்ற வேதிப் பொருள் கலாபவன் மணியின் குடலில் இருந்துளளது. இது பூச்சி மருந்தாகும்.  மேலும் மெத்தனால் மற்றும் எத்தனாலும் இருந்துள்ளது.  இந்த நச்சுப்பொருட்கள் உடலுக்குள் சென்றால், நரம்பு மண்டலம் ஸ்தம்பித்து மரணம் ஏற்படும்.
அதிக மது அருந்தியதால் கலாபவன் மணி இறந்திருக்கலாம் என்றும் கல்லீரல் பிரச்சினையால் மரணம் சம்பவித்திருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
மணியுடன் கடைசி நேரத்தில் இருந்த அவரது உதவியாளர்கள் முருகன், விபின், ஸ்ரன் ஆகியோர் மீது, மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகம் தெரிவித்திருந்தார்.  இதையடுத்து  அந்த மூவரையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.