டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு, திருமண ஏற்படுகள் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தான் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு சென்று மதம் மாறியதாக ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து குறளரசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, வேண்டுதலுக்காக தர்காவுக்கு சென்றதாக கூறினார். பின் இவருடைய தந்தை டி.ராஜேந்தர், தன்னுடைய மகன் மதம் மாறியதை வெளிப்படையாக அறிவித்தார்

இந்நிலையில் வரும் ஏப்ரல் 26ம் தேதி குறளரசனுக்கு சத்தமின்றி திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறளரசன் மதம் மாறியது காதலிக்காக தான் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த திருமண செய்தி உறுதி செய்யும் விதமாக உள்ளது . இருப்பினும் டி.ஆர் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை