காவிரி – ரெயில் மறியல் போராட்டம்: திருமாவளவன் கைது, மதுரையில் தடியடி!!

Must read

சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் மறியல் செய்த திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
சென்னை பேசின்பாலம் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விவசாய சங்கங்களின் சார்பில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து  இன்று காலை முதலே தமிழகம் முழுவதும் சுமார்   200-க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் முதலில் சம்மதம் தெரிவித்த மத்திய அரசு, பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுதான் அமைக்க முடியும் என்று கூறிவிட்டது.
இதற்கு திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் போராட்டத்தில் பங்கெடுத்து ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சென்னை பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ரெயிலை மறிக்க சென்ற விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
சென்னை தாம்பரத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினிர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article