k20

பிசினஸ் என்பதன் வரைமுறைகளை கடந்து கொஞ்சம் ஆணவத்தோடும் அதிகாரத்தோடும் நடந்து கொண்டு தன்னை பிசினஸ் தொடர்பாக பயன் படுத்திக்கொள்ள அந்த பெண் முயல்வதை உணர தொடங்குகிறாள் நாயகி.

உதாரணமாக ஒரு இடம் பிடிக்கும் பட்சத்தில் இடத்தின் சொந்தகாரர்களிடம் பேசி பத்திரங்களை வாங்கி வில்லங்கம் பார்த்து கிரையம் செய்வது முறை. ஆனால் இடம் பிடித்திருகிறது பத்திரங்களை வாங்கி வாருங்கள் என்பதும் விலையை அப்பறம் தீர்மானிக்கலாம் என்பதும் சற்று நெருடலாகிறது.

மேலும் நான் தான் வாங்க போகிறேன் என்று முதலில் சொல்லும் அந்த பெண் பின் என்னோட க்ளைண்ட் கிட்ட காட்டனும் ன்னு சொல்வதும் அந்த பெண்ணும் ஒரு மீடியேட்டர் என்பதையே காட்ட இதை அறிமுகப் படுத்திய நாயகனிடம் சொல்லும் போதெல்லாம் அவங்க சொல்றதை செய் தேவை இல்லாத ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம் என அடக்குவது எரிச்சலை உண்டு பண்ண ( அந்த பெண் தான் ஒரு சினிமா கம்பெனி ஆரம்பிக்க போகிறேன் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லியிருந்ததாள் )

நம்மால் அவனுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கெட்டு விட வேண்டாம் என நினைத்து சில தொழில் தர்மத்தையும் மீறுகிறாள் நாயகி.

செல்லருக்கு தெரியாமல் பத்திர நகல்களை நாயகன் mail id க்கு அனுப்புகிறாள்.

ஆனால் அந்த பெண் எங்கே தான் உளறிய விசயங்களை நாயகி அவனிடம் சொல்லி விடுவாளோ என்ற பயத்தில் நாயகியை பற்றி பொய்யான விசயங்களை அவனிடன் சொல்ல, வெள்ளையாக இருக்குறவன் பொய் சொல்லமாட்டானு ஏதோ சினிமா ல வர்ற காமெடி போல பணக்காரி சவிதா சொல்றதை அப்படியே நம்புகிறான் நாயகன்.

ஒரு கட்டத்தில் சொல்லி புரியவைக்க முடியாது என தீர்மானிக்கும் நாயகி எரிச்சலோடு Sorry சொல்லி விலகுகிறாள்.

குடும்ப சூழ்நிலை, புரிந்து கொள்ளாத நண்பன் என கொஞ்சம் மனஉளைச்சல் காரணமாக உறக்கம் தொலைக்க இரவு 2 மணிக்கு fb ஆன் பண்ண அப்போ ஆன் லைன்ல அபிநயா இருக்கா. தோழி என்ற அடிப்படையில் msg பண்ணுகிறாள்.

Hai

Hi

என்னப்பா தூங்கலையா ?

தூக்கம் வரலை பா ஒரு பிரச்சனை.

என்னாச்சு !? வீட்லையா ?

இல்ல பா frd க்கு

Ho… ok சொல்லலாம்னா சொல்லுங்க

இல்ல பா காலையில் call பண்றேன்.

Ok பா

நீங்க ஏன் தூங்கல

ஒன்னு இல்ல பா கொஞ்சம் மனசு சரியில்ல

என்னாச்சு பா

Morning பேசுவோம் பா அவர் கத்துறார்.
மறுநாள் தொடர்பில் வரும் அபிநயா நாயகியை விசாரிகிறாள்.நாயகனுக்கும் தனக்கும் பொதுவான தோழி என்பதால் மீட்டிங் பற்றி அபிநயா விடம் சொல்ல,
ஆமா என் கிட்ட சொன்னான் நீங்க மூணு பேரும் ITC ல meet பண்ண போறீங்கன்னு சொல்லிட்டு தான் வந்தான்.

அப்படியா சொல்லிட்டு தான் வந்துச்சா.
விஷயம் நாயகனால் ஏற்கனவே சொல்லப்பட்டதால் இயல்பாக நடந்த விசயங்களை சொல்லுகிறாள்.

நீங்க அதை அவன் கிட்ட சொல்லுங்க பா.

இல்ல பா ஏற்கனவே என்னை ஓவர் பொசசிவ் ன்னு திட்டும். இதை சொன்னா இன்னும் சண்டை தான் வரும்.

Hello அவன் best frd ன்னு உங்களை தான் சொல்வான் பா…

ஏற்கனவே காவியா விவகாரத்தில் இருந்தே நாயகனின் சொந்த விசயத்தில் தலையிடுவது இல்லை என முடிவில் இருந்ததால் அபிநயாவிடம் இல்ல பா

சரியா வராது.

ஏன் பா !?

அதான் சொன்னேனே ஓவர் பொசசிவ், ஓவர் பொசசிவ் சொல்லும் வேண்டாம் பா.

ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்களே ?

இல்ல கேளுங்க அபி…

ஓவர் பொசசிவ் ன்னு சொல்றான்ரிங்க…

ஆமா அப்படி தான் சொல்லும்…

அதான் கேக்குறேன் உங்களுக்கு அவனுக்கும்…

ச்சா… நிறுத்துங்க அபி அளவுக்கு அதிகமா அன்பு இருக்கு இல்லன்னு சொல்லல நீங்க யோசிக்கிறது போல கேவலமான விஷயம் எல்லாம் இல்ல பா. சற்று வருத்தமாக சொல்ல.

Sorry sorry பா…

பரவாயில்ல விடுங்க பா.

அத்தோடு பேச்சை மாற்றி விட, நார்மலான விசயங்கள் பேசிய நிலையில் அபிநயாவிடம் மீண்டும் Call வருகிறது.

சொல்லுங்க அபி

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.

பேசுங்க…

போன்ல இல்ல நேர்ல

ஏன் என்னாச்சி ?

எனக்கு சில கேள்விகளுக்கு பதில் வேண்ணும்.

கேளுங்க பா…

இன்னிக்கி meet பண்ணலாமா ?

இன்னிக்கி முடியாது பா எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு.

நாளைக்கும் முடியாது பா வீட்ல gest வந்திருக்காங்க.

அபி நாளைக்கி மறுநாள் meet பண்ணுவோம் பா ஏன் இவ்வளவு பதட்டம் பா !

நேர்ல சொல்றேன் பா

ஓகே அபி…

இதை ஸ்ரீ யிடம் நாயகி சொல்கிறாள். அப்போது கூட பத்மினியிடம் ஸ்ரீ பேசிக்கொண்டு இருப்பதை நாயகியிடம் சொல்லவில்லை ஸ்ரீ.