k19

ஒரு வாய்ப்பு கொடுப்போம் அவங்க சரியில்ல ன்னு தோனுச்சுன்னா அப்பறம்

கிட்ட கூட வரமுடியாது.

நிறைய நேரங்கள் பிசினஸ் சம்மந்தமாக சந்திக்கும் மனிதர்கள் இப்படி சம்மந்தமே

இல்லாமல் உளறுவதும் அதை சகித்து கொள்வதும் தெழில் தர்மம் தான் இது

புதிதல்ல என்பதால் அமைதியாக தலையாட்டிக்கொட்டே இருக்க,

எங்க வீடு அதுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். வந்தால் நாள் கணக்கில் தங்கும்.

நேத்து கூட evening அது (எழுத்தாளர்) எங்க வீட்டுக்கு வந்துச்சு. நீங்க அதை

கேக்காதிங்க (நாயகி:நான் ஏன் கேக்கபோறேன். ஆண்டவா…)

இல்ல கேக்கல

எங்க ஹஸ்பெண்டு டெய்லி நைட் 9:30 call பண்ணி பேசும். அதுக்கு கூட இது

(எழுத்தாளர்) சொல்லும் “என்ன உன் கோழி கூவீடுச்சா” ன்னு கிண்டல் பண்ணும்.

(கடவுளே என்னை காப்பாத்து முடியல என மனதக்குள் நினைத்தாலும் வெளியே

காட்டிக்கொள்ள முடியவில்லை )

வெறும் புன்னகை மட்டுமே செய்கிறாள் நாயகி.

மேலும் தொடர்கிறது.

எனக்கு fb பத்தி ஒன்னும் தெரியாது அது தான் பக்கத்தில் ஒக்கார வச்சு

சொல்லிகொடுக்கும்.நா எவ்வளவோ பரவாயில்ல எங்க அக்கா வீட்டுக்கு யாரவது

புதுசா வந்தா ரூம்க்கு ஓடிபோய் கதவை சாத்திகும். இது (எழுத்தாளர்) கூட

சொல்லுச்சு நான் அவங்களை வெளியே கொண்டுவர்றேன் பாருன்னு.

பேச்சை மாத்த நினைக்கும் நாயகி

மேம் இது நடிகை கனகா ப்ராபர்டி நிறைய பேர் வாங்க ஆர்வம் இருந்தும் அவங்க

கிட்ட போய் பேசமுடியல நிறைய கிளைன்ட் இதனாலையே missing உங்களுக்கு

பிடிக்கும் ணா நீங்க யாரையாவது வச்சி try பண்ணுங்க (VIP ஆச்சே)

அய்யோ கனகா ஒரு லூசு… அவங்க அம்மா செத்ததுக்கு அப்பறம் மெண்டல்

ஆகிடுச்சு. ( அப்பாடா பேச்சு மாறினா சரி)

பாவம் மேடம்…

அது யாரையும் நம்பாது.

கேள்வி பட்டிருக்கிறேன் மேம்.

அவங்க அம்மா இறந்ததுக்கு அப்பறம் அதுக்கு யாரும் இல்லைல அதான்.

ஆமா மேம் அவங்க அம்மா இருக்கு போதே ஒரு லைப்ல செட்டுல்

பண்ணியிருக்கணும் விட்டுடாங்க பாவம்.

கல்யாணத்தை சொல்றீங்களா !?

ம்… ஆமாம் மேம்.

அய்ய… கல்யாணம் வேஸ்ட்

ஏன் அப்படி சொல்றீங்க மேம் !?

என்ன இருக்கு கல்யாணத்தில் !? நான் அது கிட்ட கூட

சொல்லியிருக்கேன்(திரும்பவும் அங்கயே வர்றாளே)

அப்படி சொல்லாதிங்க மேம் நம்ம வாழ்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம்

வேண்ணும்.

hmm

நம்ம உணர்வுகள புரிஞ்சுகரதுகும், நமக்காக ஒருத்தர் இருக்காங்கன்ற

நம்பிகையும் வாழ்க்கைகான அர்த்தத்தை கொடுக்கும் பணம் காசு இருந்தா மட்டும்

போதுமா. இப்போ கனகா விசயத்தில் யோசிங்க…நான் கூட நிறைய முறை

எழுத்தாளர் கிட்ட சொல்லியிருக்கேன். சிக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோன்னு.

அந்த பெண்ணின் மனநிலையை

அவள் செயல் உணர்த்தியது. எதையும் கவனிக்காதது போல் கார்

ஓட்டிக்கொண்டே lipstick போட்டுகொண்டிருக்க. அவள் மன உணர்வு

புரிந்ததவளாய் நண்பனை நினைத்து கொஞ்சம் கவலையோடு அமைதியாகிறாள்

நாயகி. இதுவரைக்கும் இருவருக்கும் (நாயகன் & நாயகிக்கு) சின்ன சின்ன

மனகசப்பு இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை ஆனால் இனி..