k9

எல்லாருக்கும் தான் கா

ம்ம்

அக்கா (நாயகன் பெயரை சொல்லி ) அந்த எழுத்தாளர் உங்க frd தானே.

ஆமாம் மா…

நல்லா எழுதுறார் இல்ல கா

ஆமாம் டா எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

நீங்க சென்னை தானே அக்கா !

ஆமா டா

அவரோட பேசியிருகீங்களா

ம்… பேசியிருகேனே.

போன் ah கா.

chat, போன், நேர்ல… பேசியிருக்கேன்.

நேர்லையுமா !

ஆமா டா ஏ…

இல்லக்கா கேட்டேன். நேர்ல எப்படி இருப்பார்.

புரியல மா…

ஆள் நேர்ல பார்க்க எப்படி இருப்பார். நான் போட்டோ தான் பார்த்திருக்கேன்.

அப்படியா ! அப்படியே ரெண்டுகால் மனுஷனாட்டம் இருப்பார் டா…

Ha ha ha… ரொம்ப கிண்டல் தான் அக்கா உங்களுக்கு…

அடுத்தடுத்த விசாரணைகள் நாயகனை பற்றியே இருக்க…

என்ன டா எழுதாளரை பற்றியே விசாரிக்கிற என்ன விஷயம் நேரிடையாக கேட்டு

விடுகிறாள் நாயகி.

அவரை எனக்கு ரொம்ப புடிக்கும் கா…

நல்லா எழுதுறார் so எல்லாருக்கும் பிடிக்கும் டா…

அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். (இது புதுசால இருக்கு )

அப்படின்னு யார் சொன்னா.

அவர் தான் கா. போன்ல chatல அடிக்கடி பேசுவார். போட்டோ அனுப்புவார்.

ஊருக்கு போனா கூட சொல்லிட்டு தான் போவார்.(ஆகா பயபுள்ள எல்லாருக்கும்

உண்மையா இருந்திருக்கு பா…)

ம்ம்…

அவர் என்னை சிலுக்குனு கூப்பிடுவார்.

நீ…

நா… பொறுக்கின்னு கூப்பிடுவேன்.

பொறுக்கியா !!!???

சிரித்துக்கொண்டே ஆமா கா… அவர் ரொம்ப ரொமாண்டிக்கா பேசுவார் கா

அதனால…

ம்ம்… அப்போ உன்னையும் கட்டிபுடிச்சாச்சு…

அக்கா ! நேர்ல பார்த்தது இல்ல கா. Chat & call.

அதுல தான் கேட்டேன் மா.

ஹோ… அதுவா! அதுக்கும் மேல கா.

புரியல டா அதுக்கும் மேல னா.

போங்க கா வெக்கமா இருக்கு…

என்று அவள் சொன்ன விஷயங்கள் அதிர்ச்சி அளித்தது.

உண்மையா சொல்ற காவியா !?

ஆனா கா… சில நேரம் வீடியோ கூட அனுப்புவார். அய்யோ வேண்டாங்க ரொம்ப

அசிங்கமா இருக்குனு சொன்னேன்

அப்போ உனக்கு வீடியோ பிடிக்கலையா சரி ஓகே ன்னு சொன்னார். ஆனா எப்போ

பேசினாலும் அதை பத்தி தான் பேசுவார். அதுக்கு நான் கூட கேட்டேன் இதை தவிர

ஒன்னும் பேசமாட்டீங்கலானு அதுக்கு உன்ன பார்த்த தான் feel ஆகுது டீ ன்னு

சொல்றார் கா.

அந்த பெண் சொன்ன விஷயங்கள் சாக்கடையை விட மோசமாக நாறுகிறது.

நீ என்ன காவியா சொல்ற எழுத்தாளரா அப்படி. !!!??

ஆமா கா… ( அந்த பெண் பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அவள்

பேச்சில் ஒரு வெகுளி தனம் தெரிந்தது)

நாயகிக்குள் நிறைய கேள்விகள் எழுந்தன.

தன்னிடம் அன்பாய் இருக்கும் ஒருவரால் பிறிடம் எப்படி இப்படி கேவலமாக

நடந்துகொள்ள முடியும் ?

அன்பு மட்டும் தான் உண்மை என்றால் தீக்காயத்தில் நாயகி அவதி பட்டபோது ஏன்

வரவில்லை ? (நாயகன் மேலிருந்த அளவுக்கு அதிகமான அன்பும் மரியாதையும்,

மனத்தால் கூட காயப்படுத்தியது தப்பு என்று தானே நாயகி யோசித்தாள் !!??

அவ்வளவு அன்புக்கு, உண்மையான அன்பை மட்டும் நேசிக்கும் ஒருவர் எவ்வளவு

தடைகள் இருப்பினும் வந்திருக்கணும் தானே ! நீ ஒன்றும் கள்ளகாதலன்

இல்லையே !

நண்பன் தானே! நீ பேசும் போது நாயகி கணவர் உடன் இருப்பதை உன்னிடம்

சொல்லியும் இருக்கும் போது உன் மனதில் தவறான எண்ணமோ, நோக்கமோ

இல்லை என்றால் நீ ஒரு குடும்ப நண்பராக கூட மாறி இருக்கலாமே ! நீ எந்த

நேரத்திலும் எளிதாக call செய்திருக்கிறாய் அவளும் பேசுவாள் என்றால் எதையும்

குடும்பத்தினரிடம் அவள் மறக்கவில்லை, மறக்க வேண்டிய திருட்டு எண்ணமும்

இல்லை என்று தானே அர்த்தம் )

ஆனால் முதல் சந்திப்பில் கூட ஸ்ரீ யை மட்டுமே வரசொல்லவேண்டிய காரணம்

என்ன ?

ஸ்ரீ யின் அழகு காரணம் என்றால் அன்பென்ற வேஷம் எதற்கு ?

எல்லா மனிதனும் சராசரி தான் எதிர் பாலினத்தின் மேல் ஒரு ஈர்ப்பு சகஜம் தான்

என்றாலும் அன்புக்கு என்று மதிப்பு கொடுத்திருக்க வேண்டும் தானே ! நாயகன்

மொழியே அன்பே உயிர் மத்ததெல்லாம் …… என்பது தானே !

சரி ஸ்ரீ மேல் இருந்தது பாலின ஈர்ப்பு என்றால் மதி !!?? காவியா !!!??? எல்லா

கேள்விகளுக்கும் பதில் நாயகனால் மட்டுமே சொல்லமுடியும். கேட்டுவிடுவது

என்று முடிவெடுக்கிறாள் நாயகி போதாதா பிரச்சனை ஆரம்பிக்க !!!????