கன்னையாகுமார்.. மோடிக்கு சரியான போட்டி!: எழுத்தாளர் நயந்தாரா சைகல்

Must read

kanhaiya-kumar-jnu-speech_650x400_51457080777
 
டில்லி: தனக்கு இணையான ஒரு போட்டியாளரை கஹன்யா குமார் உருவில் பிரதமர்  மோடி சந்தித்துள்ளதாக எழுத்தாளர் நயந்தாரா சைகல் தெரிவித்துள்ளார்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் சிறையிலிருந்து விடுதலையான பிறகு,   ஊடகங்களுக்கு அளித்த “பகுத்தறிவு” பேட்டிகளுக்குப் பிறகு எழுத்தாளர் சைகல் அவரைப் பாராட்டிப் பேசினார்.
அப்போது அவர்,  “கன்னையா குமார் உணர்ச்சி ததும்பும் அவரது பேச்சினால் மட்டுமல்ல, பகுத்தறிவாலும் பட்டறிவும் உண்மைகள் நிறைந்த அவரது வார்த்தைகளினாலும்   இந்தியாவை அதிரச் செய்து விட்டார். திரு மோடி தனக்கு இணையான ஒரு போட்டியாளரை கன்னையா  குமார் உருவில் சந்தித்துள்ளார்” என்று கூறினார்.
“நம்மில் பலரும் சிறிது காலமாக வீழ்ந்து கிடந்த அந்தக் குழப்பமான சகதியிலிருந்து நம்மை மீட்டெடுத்ததற்கு நாம் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்” என்றும் சைகல்  கூறினார்.

More articles

Latest article