கடவுளை வழிப்படும் போது ஆரத்தி எதற்கு?

Must read

Tirumala 10

ஆரத்தி என்பது இந்து பூஜைகள் மற்றும் சடங்குகளில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். பொதுவாக பூஜை முடிந்தவுடன் தான் தீப ஆரத்தி காண்பிக்கப்படும். எண்ணெய் விளக்கை ஏற்றி கடவுள் சிலையை பார்த்து சுற்றப்படுவது தான் தீப ஆரத்தி. எண்ணெய் விளக்குகளை தவிர சூடம், சங்கு மற்றும் ஊதுபத்தியாலும் கூட கடவுளுக்கு ஆரத்தி எடுக்கப்படும்.
சில நேரங்களில் தீய கண்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் கூட தனிப்பட்ட நபருக்கு கூட ஆரத்தி எடுக்கப்படும். ஆரத்தி எடுக்கும் பழக்கம் பழங்கால வேத அக்னி சடங்கில் இருந்து உருவானவையாகும். கோவிலில் கடவுள் இருக்கும் கருவறை இருட்டாக இருப்பதால், எண்ணெய் விளக்கை ஏற்றி ஒளி கொண்டு வர, பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆரத்தி எடுக்கும் பழக்கம் வந்தது எனவும் சிலர் கூறுகின்றனர்.
பக்தர்கள் உள்ளே நுழையும் போது, கடவுளின் தெளிவான காட்சியை பக்தர்கள் காண்பதற்கு தோதுவாக இருப்பதற்கு, கடவுளுக்கு அருகே ஆரத்தி காண்பிப்பார்கள் அர்ச்சகர்கள். ஆரத்தி என்ற வார்த்தை ‘ஆ’ (முழுமை என அர்த்தமாகும்) மற்றும் ‘ரதி’ (காதல் என அர்த்தமாகும்) என்ற வார்த்தைகளில் இருந்து வந்தவையாகும். அதனால் ஆரத்தி என்பது கடவுளின் முழுமையான அன்பு என அர்த்தமாகும்.
அதனால் தான் ஆரத்தி எடுக்கும் போது மிகுந்த பக்தியுடன், பஜனைகள் பாடி, கைகளை தட்டி, ஆராதனைகள் புரிந்து தியானத்தில் ஈடுபடுகின்றனர். கடவுளை வழிப்பட எதற்கு ஆரத்தி பயன்படுத்தப்படுகிறது என்றும் ஆரத்தி ஏன் முக்கியமாக கருதப்படுகிறது என்றும் நீங்கள் வியந்திருப்பீர்கள். அதற்கான விடைகளை பார்க்கலாமா?
ஆன்மீக-அறிவியல் சார்ந்த கண்ணோட்டம் பூஜைகளின் போது ஒவ்வொரு காரியங்களையும் ஆன்மீக அறிவியலின் படி புரிவது மிகவும் முக்கியமாகும். நம்மில் பலருக்கும் பல விஷயங்கள் தெரிவதில்லை. உதாரணத்திற்கு, கடவுளுக்கு ஆரத்தி காட்டும் போது, ஆரத்தி தட்டை கடவுளின் அனஹட் சக்கரத்தில் (இதயம் இருக்கும் பகுதி) ஆரம்பித்து அட்ன்ய சக்கர (மைய புருவ பகுதி) வரை வலஞ்சுழியாக சுற்றலாம்.
அல்லது கடவுளை சுற்றி வந்து ஆரத்தி காண்பிக்கலாம். நம்மில் பலருக்கும் இதனுடைய சரியான முறை தெரியாமல் இருப்பதால் இந்த சடங்குகளினால் கிடைக்கும் பலனை நம்மால் அனுபவிக்க முடிவதில்லை.,
சரியான முறை ஆரத்தி தட்டு பொதுவாக வெள்ளி, வெண்கலம் அல்லது தாமிர உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும். பிசைந்த மாவு, மண் அல்லது உலோகத்தால் செய்த விளக்கில் எண்ணெய் அல்லது நெய் நிரப்பப்பட்டு அந்த தட்டின் மீது வைக்கப்படும். ஒன்று அல்லது அதற்கு (பொதுவாக ஒற்றை படையில்) மேலான திரியை எண்ணெயில் வைக்க வேண்டும்.
அதன் பின் அதனை எரிய விட வேண்டும். கற்பூரத்தையும் கூட இதற்கு பயன்படுத்தலாம். ஆரத்தி தட்டில் மலர்கள், ஊதுபத்தி, அட்சதை அரிசி போன்றவைகளும் இருக்கும். சில கோவில்களில் ஆரத்தி தட்டு பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக எண்ணெய் விளக்கை கையில் ஏந்தி கடவுளுக்கு ஆரத்தி காட்டுவார்கள் அர்ச்சகர்கள்.
சரியான முறை பணிவு மற்றும் நன்றியை கடவுள்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக தான் தீபங்கள் ஏற்றி ஆரத்தி காண்பிக்கப்படும் நோக்கமாகும். ஆரத்தி காண்பிக்கும் போது நன்றியுள்ள பக்தர்கள் கடவுளின் இறை வடிவில் மூழ்கி விடுவார்கள். இது ஐந்து பஞ்ச பூதங்களை குறிக்கும்: 1. வானம் (ஆகாயம்) 2. காற்று (வாயு) 3. நெருப்பு (அக்னி) 4. தண்ணீர் (ஜலம்) 5. பூமி (ப்ரித்வி)
ஐந்து திரிகளைக் கொண்ட (பஞ்ச ஆரத்தி என்றும் அழைக்கப்படும்) விளக்கால் ஆரத்தி காட்டப்படும் போது, ஆரத்தி தட்டில் உள்ள விளக்கை கொண்டு கடவுளின் முன்பு முழுமையான வட்ட வடிவில் சுற்ற வேண்டும். இதனால் விளக்கின் சுடரால் உமிழப்படும் வேகமான சத்வா அதிர்வெண்களால் வேகமான வட்ட இயக்கம் உருவாகும். இந்த சத்வா அதிர்வெண்கள் மெல்ல ராஜஸ் அதிர்வெண்களாக மாறும்.
ஆரத்தி காட்டும் பக்தரின் ஆன்மாவைச் சுற்றி இந்த அதிர்வெண்களின் பாதுகாப்பு கவசம் உருவாகும். இதனை தரங் கவசம் என அழைப்பார்கள். ஆரத்தி காட்டுபவரின் ஆன்மீக உணர்ச்சி அதிகமாக அதிகமாக, இந்த கவசமும் அதற்கேற்ப நீடித்து இருக்கும். ஆரத்தியின் மீது ஒருமுகப்படுத்தும் போது, இந்த அதிர்வெண்கள் அதிகரித்து கொண்டே போகும்.
-முகநூல் பதிவு

More articles

Latest article