நடிகை அமலாபால் கடற்கரையில் தான் எடுத்த போட்டோ ஷீட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படங்களில் அவர் கடல் ராணியைப் போல் காட்சியளிக்கிறார்.

’சிந்து சமவெளி’ யை தொடர்ந்து முன்னணி நடிகர்களான ஆர்யா, விக்ரம், விஜய் என்று எல்லா ஹீரோக்களோடும் நடித்தார். இதைத்தொடர்ந்து எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார் . ஆனால் அவரது திருணம் விவாகரத்தில் முடிந்தது.

அதைத்தொடர்ந்து மீடு ஹாஷ் டேகில் இயக்குநர் சுசி கணேஷன் மீது எழுத்தாளர் லீனா மணிமேகலை குற்றம் சாட்டும்போது, அவருக்கு ஆதரவாக தனி அறிக்கை ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டார் அமலாபால்.

இந்நிலையில் சமீபத்தில் கடற்கரையில் தான் எடுத்த போட்டோ ஷீட் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.