கொழும்பு: இந்தியாவை தொடர்ந்து இலங்கை அரசும், கடல் பகுதியில் தனது  எல்லையைக் குறிக்கும் பலகைவை வைத்துள்ளது.

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்குவதும், சுட்டுக்கொல்வதும் பல வருடங்களாக நடந்து வருகிறது. மீனவர்களின் படகுகளைப் பிடித்துச் செல்வதும் நடக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது பரபரப்பு எழுவதும், பிறகு அடங்குவதும் நடக்கிறதே ஒழிய தீர்வு காணவில்லை.

இந்த நிலையில், இலங்கை கடற்பகுதியில் மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அந்நாட்டு அரசு எல்லைப்பலகை அமைத்துள்ளது. இலங்கையில் இருந்து 5-வது மணல்திட்டில் இலங்கை கொடியுடன் வைக்கப்பட்டுள்ளது இந்த பலகை.

இது,  இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

ஏற்கனவே தனுஷ்கோடியில் இருந்து 5-வது மணல்திட்டில் இந்தியஅரசு எல்லைப் பலகை வைத்துள்ள நிலையில், இலங்கை அரசும் தற்போது எல்லைப் பலகை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.