புதுடெல்லி:

கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் பெண்கள், கல்வி கற்காதவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தினக் கூலி தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என 1 கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.


இந்த மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், நலிவடைந்த பிரிவினர் வேலை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும், நகர்ப்புறத்தைக் காட்டிலும் கிராமப்புறத்திலேயே கடந்த ஆண்டில் அதிக அளவில் வேலை இழப்பு இருந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு கிராமப் புறங்கள் உள்ளன. இங்கு தான் வேலை இழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பெரும்பாலும் பெண்களே வேலை இழப்பைச் சந்தித்துள்ளார்கள். 1 கோடியே 10 லட்சம் பெண்களும், 22 லட்சம் ஆண்களும் வேலை இழந்ததாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.