கடக ராசி
கடக ராசி

அனைவருக்கும் உதவும் அருங்குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே..
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்து மன உறுதியையும் எடுத்த காரியம் யாவிலும் வெற்றியையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் அமர்கிறார். இதனால் உங்களுடைய பலம், பலவீனத்தை நன்கு ஆராய்ந்து எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். ஆனாலும், எடுத்த காரியத்தை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றுவீர்கள். வாக்கு ஸ்தானத்தில் ராகு அமர்வதால் சச்சரவுகள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பண வரவு அதிகரிக்கும். அதே நேரத்தில் வரவுக்கு மீறி செலவும் ஏற்படும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசக்கூடும். பொறுத்துப்போவது சிறப்பு. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. . . கண் தொடர்பான நோய்கள் வரக்கூடும். முக்கிய வேலைகளை பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடியுங்கள். .
08.01.2016 முதல் 10.03.2016 வரை உங்கள் வாக்கு வன்மை கூடும். ம். எதிர்பாராத பணவரவு குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். தூரதேசத்தில் சிலருக்கு வேலை கிடைக்கும்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை உங்கள் சுகலாபாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் காரியத்தடைகள் நீங்க எடுத்த காரியம் அனைத்தும் நிறைவாய் நிறைவடையும். சிலருக்கு புது வீடு யோகம் அமையும். இதுவரை தொல்லை கொடுத்து வந்த வழக்குகள் உங்களுக்கு சாதமாக முடியும்.
16.11.2016 முதல் 25.7.2017 வரை வெளிநபர்களிடம் குடும்ப விசயங்களை பேசாதீர்கள். நண்பர்களிடையே மனஸ்தாபம் ஏற்படும்.
 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு தந்தையாருடன் பிணக்கையும், , வீண் செலவையும் அளித்துக்கொண்டிருந்தார் கேது. இப்போது அவர், ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைகிறார்.   தந்தையாருக்கு இருந்த நோய் குணமாகும். ஆனாலும் எந்த ஒரு முடிவையும் ஆராய்ந்து எடுப்பது அவசியம்.
பண வரவு சரளமாக இருக்கும். செலவுகளைக் குறைத்து சேமிப்பில் ஈடுபடுவீர்கள். டும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. கணவன் மனைவிக்குள் பிணக்கு வந்து தீரும். 08.01.2016 முதல் 12.07.2016 வரை மங்கள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்களது அந்தஸ்து உயரும். சிலர் புது வீட்டில் குடியேறுவார்கள். மாற்று மதத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். மகளின் திருமணம் தொடர்பாக நல்ல செய்தி வரும்.
13.07.2016 முதல் 20.03.2017 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். முன்கோபத்தை தவிருங்கள். அதே போல எதற்காகவும் பதட்டப்படாதீர்கள். நிதானமாக செயல்படுங்கள். சிலர் வாயுத் தொல்லையால் அவதியுற நேரிடும். 21.03.2017 முதல் 25.07.2017 வரை புதுப் புது சிந்தனைகள் மனதில் உதிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதோர்க்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.