ii

“மறைந்த மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்த,  அவரது இல்லத்துக்கு முதல்வர் ஜெயலிலதா வந்த போது, அவரை சந்திக்க முயன்ற சரத்தை தடுத்து அனுப்பிவிட்டார்கள் அதிகாரிகள். சரத்தை சந்திக்க ஜெயலலிதா விரும்பவில்லை என்பதே இதற்குக் காரணம்” இப்படி ஒரு செய்தி பரபரப்பா மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கறது.

சரத்தோ, “”நான்  முதல்வர் கார் அருகில் சென்று  அவரைப் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டுத்தான் திரும்பினேன். அப்போது எடுத்த படத்தை வைத்து தவறாக செய்தி பரப்புகிறார்கள்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதங்கத்துடன் விளக்கம் அளித்திருக்கிறார் சரத்குமார்.

ஆனால் இதை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியாமல் கவலையில் இருக்கிறார்கள் அவரது அணியில் போட்டியிடும் நடிகர்கள்.

“மறைமுகமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு விஷால் அணிக்கு இருக்கிறதோ” என்ற தோற்றத்தை இந்த சம்பவம் ஏற்படுத்திவிட்டதுதான்  இந்த கவலைக்குக் காரணம்.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்போருக்கு தலை பத்தாயிரம் ரூபாய் அன்பளிப்பு அளிக்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்று ஒரு செய்தி பரவிவருகிறது.

“முதல்வர் சந்திக்க மறுத்தால் அவரது ஆதரவு சரத்துக்கு இல்லை என்று தெரிந்துவிட்டது. ஆகவேதான் பெருந்தொகை கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்” என்று காரணமும் சொல்கிறார்கள்.

இதை சரத் அணியினர் மறுக்கிறார்கள்.

“மிக அதிக தொகை அளிப்பதாக புரளி கிளப்பி எதிர்பார்ப்பை அதிகரிக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு செலவிடப்போவதில்லை. ஆகவே குறைத்து பணம் கொடுக்கும் போது வாக்காளர்கள், பணத்தையும் வாங்கிக்கொண்டு எதிரணிக்கு வாக்களித்து விடுவார்கள்.  ஆகவே எதிர் அணியினர்தான் பத்தாயிரம் தரப்போவதாக புரளி கிளப்புகிறார்கள்” என்று குமுறுகிறது

யப்பா… பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் எல்லாவற்றையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த நடிகர் சங்க தேர்தல்!