ISIS Al-Qaeda Militants Fighting Syrian Civil War
சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி, , “இஸ்லாமிய தேசம்”அமைத்துவிட்டதாக கூறுகிறது ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம். அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்துக்குள் அத்தனை எளிதில் யாரும் நுழைந்துவிட முடியாது. ஆனால், கடந்த ஒன்றரை வருடங்களாக நெதர்லாந்துபுலனாய்வுத்துறையான ஏ.ஐ.வி.டி. (AIVD) அந்த பகுதியினுள் புகுந்து பலவித தகவல்களை அறிந்திருக்கிறது. அதில் சில தகவல்களை  வெளியிட்டிருக்கிறது.
ஐ.எஸ். பயங்கரவாதிகள், பெண்களை பிடித்து அடிமைகளாக விற்பது, பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொள்வது போன்ற கொடூரங்கள் ஏற்கெனவே வெளிவந்துவிட்டன.  இந்த அறிக்கையில் வேறு சில  தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் நெதர்லாந்து உளவுத்துறையினர்.
அந்த சில தகவல்கள்:
– ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குள் புதிதாகவரும் ஒவ்வொருவரும்,தேசியத் தலைவர் அபுபக்கர்அல் பாக்தாதிக்குவிசுவாசமாக இருப்பதாகஉறுதிமொழி எடுக்கவேண்டும்.
– ஐ.எஸ். பிரச்சாரத்தை நம்பி, ஐரோப்பாவில் இருந்துசெல்பவர்கள் தங்களுக்கு அங்கே வசதியான வீடுகள்கிடைக்கும் நினைக்கிறார்கள். ஆனால், ஐ.எஸ்., எந்த வித அடிப்படை வசதியும் இல்லாதவீடு தான் அவர்களுக்குகிடைக்கிறது. மேலும், சிலமணி நேரமே மின்சாரம்இருக்கிறது.
– ஐ.எஸ். கட்டுப்பாட்டுப்பிரதேசத்தினுள்,உளவாளிகள் ஊடுருவலாம்என்ற அச்சம்  பரவலாகஉள்ளது. எல்லோரும்சந்தேகக்கண்ணோடு பார்க்கப்படுகிறார்கள்.  அனைவருமே கண்காணிக்கப்படுகின்றனர். உளவாளிகள்என்ற சந்தேகம் ஏற்பட்டால், விசாரணை என்ற பெயரில் ஏதோ நடத்துவார்கள். அடுத்து சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.  ஐரோப்பாவில் இருந்துவந்தவர்கள் என்றாலும்மரணதண்டனையில் இருந்து தப்ப முடியாது.
– ஐ.எஸ். படையினர்  ஒருகிராமத்தை கைப்பற்றினால்,அங்கு கொலைகள்,சித்திரவதைகள்,பாலியல்வன்புணர்ச்சிகள் என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும்.
– ஐரோப்பாவில் இருந்துபுதிதாக சேரும் ஒருவர்,ஏற்கனவே ஐ.எஸ்.கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்வாழும் ஒருவரைத் அறிந்துவைத்திருக்க வேண்டும்..புதிதாக இயக்கத்தில் சேருவோர் கடுமையானவிசாரணைக்கு உட்படுத்தப்படுவர். அவர்களின்பாஸ்போர்ட், அடையாளஅட்டைகளை ஐ.எஸ். இயக்கத்தினர் வாங்கிவைத்துக் கொள்வார்கள்.
பொறியியலாளர்கள்,மருத்துவர்கள், பல்வேறுமொழிகளில் புலமைகொண்டவர்கள் என்றால் உடனடியாக வேலை கிடைக்கும். இல்லாவிட்டால் படையில் சேர்க்கப்படுவார்கள்.
– குடும்பமாக பிள்ளைகளோடு வருபவர்கள் என்றாலும்,  ட,ஆண்களும் பெண்களும் பிரித்து வைக்கப்டுகிறார்கள்.  ஆண்களுக்கு  கட்டாயஇராணுவப் பயிற்சி உண்டு.
– பெண்களுக்கு  இராணுவபயிற்சி கிடையாது.  ஆனால்,கலாச்சாரப் பொலீஸ் (அல்கண்சா படையணி)  பணிக்கு சேர்க்கிறார்கள்.தெருக்களில், பொதுஇடங்களில், பெண்கள் ஐ.எஸ்.கட்டுப்பாடுகளைபின்பற்றுகின்றார்களா என்பதை இவர்கள் கண்காணிக்க வேண்டும்.
– பிள்ளைகள் பாடசாலைக்குஅனுப்பப்படுகிறார்கள். ஆனால்  அவர்களுக்கு ஐ.எஸ்.கொள்கைகளையேகற்பிக்கிறார்கள்.ஆயுதங்களை கையாள்வதுஎப்படி என்பதும் சிறுவர்களுக்குசொல்லித்தரப்படுகிறது. வருங்கால கணவனுக்குஎன்னென்ன பணிவிடைகள்செய்ய வேண்டுமென்றுசிறுமிகளுக்குகற்றுத்தரப்படுகிறது. .
– பெண்  குழந்தைகளுக்கு ஒன்பது வயதானால் உடலைமூடும் ஆடை அணிவது கட்டாயம்.  ஆண் பிள்ளைகள்ஒன்பது வயதானால்,இராணுவ பயிற்சி துவங்குகிறது.
பொது இடங்களில் நடக்கும்மரண தண்டனைக்காட்சிகளைப் பார்ப்பதற்குஅனைவரும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
– பெண்கள் அதிகமானபிள்ளைகளை பெறுவதற்குஊக்குவிக்கப் படுகின்றனர்.
– தனியாக வாழும் இளம்பெண்களும், விதவைகளும்அதற்கென்று இருக்கும் பெண்கள் விடுதிக்குஅனுப்பப் படுகின்றனர். அங்குஎந்த வித அடிப்படை வசதியும் கிடையாது. குப்பை, கரப்பான்பூச்சிகளுக்கு இடையே வாழ வேண்டியதுதான்.
முன்பு  போராளிகளுக்கு குறைந்த அளவு சம்பளம்கொடுக்கப்பட்டது. இப்போது அதுவும் இல்லை. காரணம்,  சமீபத்தில் ஐ.எஸ். நடத்தி வந்தஎண்ணைக் கடத்தல்வியாபாரம் பெருமளவுபாதிக்கப் பட்டததான்.
ஐ.எஸ். கட்டுப்பாட்டு பகுதிக்குள் எந்த நேரமும்விமானக் குண்டு வீச்சுநடக்கலாம் என்ற அச்சம்நிலவுகிறது.  பொது மக்கள்அடிக்கடி குண்டுவீச்சுகளுக்குபலியானாலும், யாரும்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைவிட்டு வெளியேற முடியாது.பயங்கரவாதிகளுக்குத் தெரியாமல் இரகசியமாகதப்பியோட முனைந்துபிடிபட்டால் மரண தண்டனைநிச்சயம்.
மருத்துவ மனைகள் குறைவு. அதிலும் போதிய மருந்து கிடையாது.  பெண் மருத்துவர்களும் மிகக் குறைவானவர்களே இருக்கிறார்கள்.  ஆண் மருத்துவர்கள், பெண்களுக்கு பிரசவம் பார்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் இருக்கிறது. ஆகவே பிரசவத்தின் போது தாய், சேர் மரணமடைவது இங்கு சர்வ சாதாரணம்.