ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பிடியில் இந்திய பாதிரியார்

Must read

isis
ஐ.எஸ்., பயங்கரவாதிகள்

ஏடன்:
ஏமனில் இருந்து இந்தியாவை சேர்ந்த பாதிரியாரை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரபு நாடான ஏமனில் உள்ள ஏடன் நகரில் இயங்கி வரும் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் முதியோர் மருத்துவமனை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாக்குதல் நடந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்த டாம் உழுன்னாளில் என்ற பாதிரியாரை காணவில்லை. இவர் இந்தியாவை சேர்ந்தவர். மாயமான பாதிரியாரை ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவினர் பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்கதல் சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய டேஷ் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏடன் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதலில் ஒரு இந்தியச் செவிலியர் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

More articles

Latest article