polish mag
ஐரோப்பா பெண்ணுக்கு அகதிகள் பாலியல் துன்புறுத்தல் தருவது போன்று சித்தரிக்கப்பட்ட படம்

டெல்லி:
ஐரோப்பா பெண்ணுக்கு அகதிகள் பாலியல் துன்புறுத்தல் தருவது போன்று சித்தரிக்கப்பட்ட படம் பத்திரிக்கை ஒன்றில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாக மக்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். அவ்வாறு வருகை தரும் அகதிகள் கற்பழிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பாவுக்குள் அகதிகளை அனுமதிக்க அந்நாடுகளின் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐரோப்பிய பெண்களுக்கு அகதிகளாக வரும் ஆண்களால் ஆபத்து ஏற்படுகிறது, என்பதை சித்தரிக்கும் வகையில் போலந்து நாட்டில் வெளிவரும் w sieci என்ற பத்திரிக்கை, அட்டைப்படம் வெளியிட்டுள்ளது.
அதில் ஐரோப்பிய ஒன்றிய கொடியை ஆடையாக அணிந்த பொன்நிறம் கொண்ட ஒரு பெண்னை, கறுப்பு நிற களை கொண்ட ஆண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
இதில் அந்த பெண்ணை ஐரோப்பா பெண்ணாகவும், ஆண்கள் அகதிகளாக வந்தர்களை போலவும் குறிப்பிடுகிறது.
இந்த அட்டைப்படம் சமூக வளைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. விமர்சனங்களும், ஆதரவும் வலுத்து வருகிறது.
இஸ்லாமிய கற்பழிப்பில் ஐரோப்பா என அந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த பத்திரிக்கையில் “ஐரோப்பா தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறதா” உள்பட பல தலைப்புகளில் சர்ச்சைக்குறிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
ஒரு கட்டுரையில், ‘‘மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்லாமுக்கும் கடந்த 14 நூற்றாண்டுகளாக யுத்தம் நடந்து வருகிறது. இதற்கு அடையாளமாக தற்போதுள்ள பழைய ஐரோப்பாவில் இரு கலாச்சார மக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.