ஏப். 23-ல் சைதாப்பேட்டையில் பிரசாரத்தை தொடங்குகிறார் கருணாநிதி

Must read

dd
சென்னை: தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வருகிற 23 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடக்குகிறார். கருணாநிதி தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் ஏப்ரல் 25 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். பின்னர் அங்கு மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். மீண்டும் மே மாதம் 12 ஆம் தேதி தொகுதி முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கருணாநிதியின் பிரசாரத் திட்டத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் இடம்பெறவில்லை.
சைதாப்பேட்டையில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார். இதைத்தொடர்ந்து மரக்காணத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் வேனில் இருந்தவாறு பேசுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
அவரது சுற்றுப்பணயம் விவரம்:
ஏப்ரல் 24: மாலை 4 மணி- கடலூர் பொதுக் கூட்டம், மாலை 5 மணி சிதம்பரம் (வேன்), மாலை 6.30 சீர்காழி (வேன்), இரவு 7.30 (மயிலாடுதுறை பொதுக் கூட்டம்)
ஏப்ரல் 25: இரவு 7 மணி – திருவாரூர் பொதுக் கூட்டம்
ஏப்ரல் 26: மாலை 5 – தஞ்சாவூர் பொதுக் கூட்டம்
ஏப்ரல் 27: மாலை 7 மணி திருச்சி பொதுக் கூட்டம்
ஏப்ரல் 28: காலை 10 – பெரம்பலூர் (வேன்), காலை 11 – உளுந்தூர்பேட்டை (வேன்), மாலை 4 – விழுப்புரம் பொதுக் கூட்டம், மாலை 5- திண்டிவனம் (வேன்), இரவு 6- செங்கல்பட்டு (வேன்)
மே 2: மாலை 4 மணி – திருநெல்வேலி பொதுக் கூட்டம், மாலை 6- ஆலங்குளம் (வேன்), இரவு 7 மணி- கடையநல்லூர் (வேன்), இரவு 8- சங்கரன்கோவில் (வேன்), இரவு 9- ராஜபாளையம் பொதுக் கூட்டம்
மே 3: மாலை 4 – திருவில்லிப்புத்தூர் (வேன்), மாலை 6- விருதுநகர் (வேன்), இரவு 7- அருப்புக்கோட்டை (வேன்), இரவு 9- மதுரை பொதுக் கூட்டம்
மே 5: சென்னை பொதுக் கூட்டம்
மே 7: மாலை 4.30 – காஞ்சிபுரம் பொதுக் கூட்டம், இரவு 7.30- ராணிப்பேட்டை (வேன்), இரவு 8- காட்பாடி (வேன்), இரவு 9- வேலூர் பொதுக் கூட்டம்
மே 8: மாலை 5-வேன்), மாலை 7- தர்மபுரி (வேன்), இரவு 9- சேலம் பொதுக் கூட்டம்
மே 9: மாலை 5- ஈரோடு பொதுக் கூட்டம், மாலை 7- திருப்பூர் (வேன்), மாலை 8.30: கோவை பொதுக் கூட்டம்
மே 12: திருவாரூர் தொகுதி
மே 14- சென்னை

More articles

Latest article