பீப்  சர்ச்சை: 3:

 

சிம்புவுடன் அனிருத்
சிம்புவுடன் அனிருத்

சிம்பு பாடிய அருவெறுப்பான பீப் பாடலை இசையமைத்தது அனிருத் என்று சொல்லப்பட்டது. சிம்புவும், “ இது போல இன்னும் 150 பாடல்களை நானும் இசைமைப்பாளர் அனிருத்தும் இணைந்து உருவாக்கியுள்ளோம்” என்று திமிராகக் கூறினார்.

இந்த நிலையில், தனது அமைதியைக் கலைத்து பேசியிருக்கிறார் இசையமைப்பாளர்அனிருத்.

அவர், “தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக டொரொன்டே இசை நிகழ்ச்சிக்காக இசை அமைப்பதில் நான் முழுமையாக ஈடுபட்டிருந்தேன். பீப் பாடல் பற்றி என் நிலையை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த பாடலுக்கும் எனக்கும் சம்சபந்தம் இல்லை.. அந்த பாடலை நான் எழுதவில்லை.. இசை அமைக்கவில்லை.. பாடவில்லை! பிறகு எப்படி என் பெயரை இழுக்கிறார்கள் என்று புரியவில்லை.” என்று கூறியிருக்கிறார்  அனிருத்.

மேலும், “நான் பெண்களை மிகவும் மதிப்பவன். நான் சொந்தமாக இசை அமைத்திருக்கும் பாடல்களைக்கேட்டாலே இது தெரியும். இந்த பீப் பாடல் குறித்து தேவையற்ற முறையில் என் பெயர் இழுக்கப்படுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார் அனிருத்.