எந்திரன் 2 பட பூஜை எப்போது?

Must read

Endhiran-Bus-740x431

ரஜினி தற்போது நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், அடுத்த படமான “எந்திரன் 2” படத்துக்கு, அவரது பிறந்தநாள் அன்று பூஜை போடப்போகிறார்கள் என்று தகவல் வந்தது.

“அடுத்த சில நாட்களில் மார்கழி மாதம் பிறந்துவிடும். அப்போது எந்த படத்துக்கும் பூஜை போடுவது வழக்கமல்ல. ஆகவே ரஜினி பிறந்தநாள் அன்று எந்திரன் 2 படத்துக்கு பூஜை” என விளக்கம் சொல்லப்பட்டது.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

இதற்கு காரணம் வெள்ளம்தான்.

தமிழகத்தில் கடுமையான வெள்ளச்சேதம் ஏற்பட்டதை அடுத்து, தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றும் அறிவித்தார் ரஜினி.

இந்த நிலையில்தான் எந்திரன் 2 பூஜை பற்றிய செய்தியும் கசிந்தது. “இது ஒரு பார்மாலிடி பூஜைதானே.. நடத்திவிடலாம்” என்றுதான் ரஜினி நினைத்தார்த.

ஆனால், அவரது நலம் விரும்பிகள், “இப்போதே, வெள்ள நிவாரணத்துக்கு நீங்கள் நிறைய உதவி செய்யவில்லை என்பதாக பலரும் விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில் புது பட பூஜை போட்டால், “ரஜினிக்கு பிஸினஸ்தான் முக்கியம்” என்றும் விமர்சிப்பார்கள். ஆகவே எந்திரன் 2 பட பூஜையை தள்ளி வைக்கலாமே” என்று சொல்லியிருக்கிறார்கள்.

இது ரஜினிக்கும் சரி என படவே, பூஜை தள்ளி வைக்கப்பட்டது.

தை பொங்கலுக்குப் பிறகு எந்திரன் 2 பட பூஜை இருக்கும் என்கிறது கோலிவுட் பட்சி

(அதாரு பட்சி? ஷங்கர் யூனிட் ஆள்னு வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே!)

More articles

Latest article