எடப்பாடி வென்றதாக சபாநாயகர்அறிவிப்பு

Must read

122 வாக்குகள் பெற்று எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பது நடப்பதாக அறிவித்தது.

இன்று காலை சபை கூடியவுடன், திமுக, காங்கரிஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் அனைவகும். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு  மறுப்பு தெரிவித்தார் சபாநாயகர் தனபால். இதனால் அவரது இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் முன்பு இருக்கும் மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. புத்தகங்கள் கிழித்து எறியப்பட்டன. சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. சபாநாயகர் இருக்கை மீது திமுக எம்எல்ஏ ரெங்கநாதன் அமர்ந்தார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் முன்பு இருக்கும் மைக்குள்  வீசி எறியப்பட்டன. தி.மு.க. எம்எல்ஏ பூங்கோதை, எழும்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் இருக்கை மீது ஏறி நின்று முழக்கமிட்டனர்.

இதன் பிறகு சபையை ஒத்தி வைத்த சபாநாயகர் தனபால், மூன்று மணிக்கு கூட்டம் துவங்கும் என்று அறிவித்தார்.

அதன்படி மீண்டும் சட்டமன்றம் துவங்கியது. அப்போது திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இல்லை. இந்த நிலையில் வாக்கெடுப்பு நடந்தது. பிறகு எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தால்.

More articles

Latest article