111111

ந்திரப் புன்னகை படத்தை அடுத்து,  இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்கவிருக்கும் படம் – கள்ளன்.  ஆனால் கெட்அப், கேரக்டர் எல்லாமே டோட்டலி டிப்ரன்ட்.

முறுக்கு மீசையும், முரட்டுப் பார்வையுமாக மிரட்டுகிறார் கரு கரு பழனியப்பன்.

இப்படி இவரை மாற்றியவர் சந்திரா.

பிரபல எழுத்தாளரான சந்திரா  இயக்குநர் அமீர், ராம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். கவனிக்கத்தக்க படைப்பாளி.

அவர்தான் இந்தப்படத்தின் இயக்குநர். அறிமுகமாகும் படம் இது. துவக்கவிழாவின் போதே அனைவரின் உள்ளம் கவர் கள்ளனாக ஆகிவிட்டது படம். அதற்குக் காரணம், இயக்குநர் சந்திரா எடுத்துக்கொண்டிருக்கும் கதைக் களம்.

விவசாய சமூகம் உருவாவதற்கு முன்பு வாழ்ந்த வேட்டை சமூகம் இன்றைக்கு இல்லை! அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை உண்மைக்கு  மிக அருகில்  நின்று சொல்லும் படமாம் இது.

எழுத்தைப்போல் இயக்கத்திலும் பூரண நிலவாய் ஒளிர  அறிமுக இயக்குநர் சந்திராவுக்கு வாழ்த்துகள்!