உலக அழகி

லக அழிகியாக தேர்வானவரை விட்டுவிட்டு, அடுத்த இடம் பிடித்தவருக்கு மகுடம் சூட்டி, “இவர்தான் உலக அழகி” என்று அறிவித்தும் விட்டார்கள். அதன் பிறகு, தவறு தெரிந்து, மன்னிப்பு கேட்கப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2015ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று நடந்தது.    இதில் உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் வென்றார்.  இவருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை, மிஸ் கொலம்பியாவாயன அரியட்னா குடியர்ரெஸ் பெற்றார்.

ஆனால் விழா மேடையில், இரண்டாம் இடத்தை வென்ற அரியட்னாவுக்கு மகுடம் சூட்டப்பட்டதோடு, அவரே உலக அழகியாக அறிவிக்கப்பட்டார்.

அதன் பிறகுதான் விழா நிர்வாகிகளுக்கு தவறு புரிந்தது. உடனே. அவரது தலையில் சூடிய கிரீடத்தை கழற்றி, உலக அழகியாக வென்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் பியா அலோன்ஜோவுக்கு சூட்டினர். இதற்காக விழாக்குழுவினர் வருத்தமும் தெரிவித்தனர். இந்த குளறுபடி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“மகுடம் சூட்டப்பட்டு கழற்றப்பட்டதால் அரியட்னாவுக்கு வருத்தம் ஏற்படதாதா.. தவிர உலகமே கவனிக்கும் ஒரு போட்டியில் இவ்வளவு அசிரத்தையாக நிர்வாகிகள் இருப்பார்களா..” என்று பலரும் கடுமையாக விமர்சித்தார்கள்.

சரி, உலக அழகியாக தேர்வான பியா, இந்த உலகத்துக்கு சொல்லும் செய்தி என்ன?

“உலக அழகியாக இருப்பது மரியாதைக்குரியது மட்டுமல்ல.. பொறுப்புமிக்கதும் கூட.

ஆகவே இளைஞர்களின் நலனுக்காக குரல் கொடுப்பேன். எச்.ஐ.வி உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வேன்” என்றார்.

 

(http://www.dailymail.co.uk/news/article-3368439/Disaster-strikes-Miss-Universe-2015-Steve-Harvey-announces-WRONG-winner.html)