உலகிலேயே அதிசயமான இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்

Must read

உலகிலேயே அதிசயமான இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்

இதுவரை உலகிலேயே எந்த நாட்டுப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் செய்யாத சாதனையை நமது மோடி-அமித்ஷா இணையர் செய்திருக்கிறார்கள்!

அவர்களது கட்சியான பாஜக ஆட்சி செய்யும் உ. பி. யில், அவர்களுக்குக் கீழ் இணை அமைச்சராக இருக்கும் அஜய் மிஸ்ரா என்பவர் விவசாயிகளை நோக்கி, ” உங்கள் போராட்டங்களை எப்படிச் சந்திப்பது என்பது எனக்குத் தெரியும்” என்று ஒரு பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாகச் சவால் விட்டார்!

அடுத்த இரண்டே தினங்களில் அதை மெய்ப்பிக்கும் வகையில், உ. பி யில் லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய ஊர்வலத்தில் அவரது மகன் ஆசிஷ் மிஸ்ரா மிருகத்தனமாக காரை விட்டு ஏற்றியதில் 9 பேர் இறந்து போனார்கள்!

இதைப் பற்றி ‘பொறுப்புள்ள’ பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்ற ” பெருமை “யை அடைந்து விட்டார்கள்!

ஆனால், மக்களுக்கு ஆறுதல் கூற வந்த காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைப்பு…முன்னாள் தலைவர் ராகுல், சத்தீஷ்கர் முதல்வரை மாநிலத்துக்குள்ளேயே விட மறுப்பு  ஆகிய காட்டு தர்பாரை யோகி அரசு அவிழ்த்து விட்டிருக்கிறது!

“இது நம் நாடு தானா… இல்லை, அயல் நாடா?” என்று மக்கள் கேட்கிறார்கள்… உச்ச நீதி மன்றமும் கேட்கிறது!

நன்றி : ஓவியர் இர. பாரி

More articles

Latest article