உயிருக்கு போராடும் நோயாளியை விரட்டியடித்த மலேசியா அரசு ஆஸ்பத்திரி

Must read

12190107_837057316415701_4638076335924424518_n
கோலாலம்பூர்:
பெண்ணின் ஆடையை சுட்டிக்காட்டி உயிருக்கு போராடிய குழந்தையை மலேசியா அரசு மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் லெச்சனம் இப்படி தான் இருக்கும் போல் இருக்கிறது. மலேசியாவில் ஒரு பெண்மணி தனது குழந்தையின் கையில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட தூக்கிக் கொண்டு குலாய் அரசு மருத்துவமனை அவசர பிரிவுக்கு ஓடிவந்தார்.
ஒரு சிறிய விபத்தில் ஏற்பட்ட இந்த காயத்தில் இருந்து ரத்தம் அதிகம் வெறியேறியிருந்ததால், தனது குழந்தை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அழுது புலம்பிக்கொண்டே அந்த தாய் பதறினார். ரத்தம் வெளியேறியதில் குழந்தை அணிந்திருந்த ஆடைகயிலும், இவர் அணிந்திருந்த ஆடைகளிலும் ரத்தக் கரை படிந்திருந்தது.
இதை கண்ட மருத்துவமனை நர்சுகள், ரத்தக் கரை  ஆடையில் படிந்திருந்ததால் அவசர பிரிவை விட்டு வெளியேறுமாறு நுழைவு வாயிலிலேயே அந்த பெண்ணை விரட்டினர். அதோடு, அந்த பெண்ணும் அரைக் கால் டவுசர் அணிந்திருந்ததால் அவசர பிரிவிக்குள் வரக்கூடாது என்றனர். எப்படியோ எனது மகனுக்கு சிகிச்சை அளியுங்கள் என்று கூறிவிட்டு, நர்சுகள் உத்தரவிட்டபடி அந்த பெண் வெளியிலேயே காத்திருந்தார்.
ஆனால் அதற்குள் குழந்தையின் கையில் இருந்த ரத்தம் உரைந்து, ரத்தம் வெளியேறுவது நின்றதால் அந்த தாய் நிம்மதியடைந்தார். எனினும் அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக வெளியிலேயே காத்திருந்தார். சில மணி நேரம் கழித்து வந்த நர்சுகள் குழந்தையை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்தனர்.
‘கையில் காயம் ஏற்பட்டதற்கு ஏன் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து நேரத்தை வீணடிக்கிறீர்கள்’’ என அந்த தாய் கேட்டதை நர்சுகள் காதில் வாங்கிக் கொள்ளாமல், தங்களது பணியை மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் ஒரு டாக்டர் வந்து சில நொடிகள் குழந்தையை பார்த்துவிட்டு, எந்த சிகிச்சையும் அளிக்காமல், தாயிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றுவிட்டார்.
இதனால் குழந்தையுடன் அங்கிருந்து வெளியேறிய அந்த பெண், தனியார் மருத்துவமனைக்குச் சென்று தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்தார். நோயாளி இறக்கும் தருவாயில் கூட இப்படி ஆடை விஷயத்தில் மருத்துவமனை இப்படி கராராக இருந்தால், நோயாளியின் நிலை கவலைக்கிடம் தான் என்று கூறுகின்றனர் மனித நல ஆர்வலர்கள்.
மருத்துவ பணி என்பது அர்ப்பணிப்பு பணி என்று கூறுவார்கள். ஆனால், இப்போது எல்லாம் அந்த நிலை இல்லை. உலகளவில் எல்லா இடங்களிலும், அரசு மருத்துவமனைகளின் நிலை இதே கதி தான் போல் இருக்கிறது. இதனால் ஏழைகளுக்கு தான் துன்பம் தொடர்கிறது…

More articles

Latest article