உத்திரப் பிரதேசம் : பிரியங்காவின் கேள்வியால் திணறும் காங்கிரஸ் வேட்பாளர்கள்

Must read

க்னோ

த்திரப் பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் மனு செய்தவர்களிடம் பிரியங்கா காந்தி நேர்காணல் நடத்தி வருகிறார்.

பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலராகவும் உத்திரப் பிரதேச கிழக்கு மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் வேட்பாளர் இறுதிப் பட்டியலை தயார் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு பிரியங்கா காந்தியின் உதவியை கோரி இருந்தார்.

பிரியங்கா காந்தி நேற்று முன் தினம் லக்னோவில் பேரணியில் கலந்துக் கொண்டார். மக்கள் அவருக்கு பெறும் வரவேற்பு அளித்தனர்.

அந்த ஒரு நாள் கொண்டாட்டத்துக்கு பிறகு அடுத்த நாளே பிரியங்கா மக்களவை தேர்த்லில் போட்டியிட  வேட்பாளராக மனு செய்திருந்த உத்திரப் பிரதேச காங்கிரஸ் தொண்டர்களிடம் நேர்காணல் நடத்த தொடங்கி விட்டார். அவர் தொடர்ந்து இந்த நேர்காணலை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு வேட்பாளரிடமும் பிரியங்கா சுமார் ஒரு மணி நேரம் கேள்விகளை எழுப்புகிறார். இன்று அதிகாலை 5.30 மணி வரை அவர் நடத்திய நேர்காணலில் 10 தொகுதிகளை சேர்ந்தவர்களுடன் நேர்காணல் நடத்தி உள்ளார். வேட்பாளர்களில் பலர் அவர் கேள்விகளால்  திணறி வருகின்றனர்.

இந்த நேர்காணலில் போது ப்ரியங்கா ஒவ்வொருவரையும் அவருடைய சொந்த வாக்குச் சாவடியில் எத்தனை வாக்குகள் கிடைத்தன என்னும் கேள்விக்கு பலரும் விடை தெரியாமல் விழித்துள்ளனர். அடுத்தது அவர்கள் தங்கள் சொந்த வாக்குச் சாவடி அமைந்துள்ள இடத்தில் எத்தனை ஊழியர் கூட்டங்களை எப்போதெல்லாம் நடத்தி உள்ளனர் என பிரிங்கா எழுப்பிய கேள்விக்கும் யாரிடமும் விடைஇல்லை.

அது மட்டுமின்றி அவரவர் போட்டியிட உள்ள தொகுதிகளில் உள்ள உள்ளூர் பிரச்னைகள் என்ன என்பதை கேட்டு அறிகிறார். அதன் பிறகு அந்த பிரச்னைகள் குறித்த விவரங்களை அறிய பல கேள்விகளை பிரியங்கா எழுப்புகிறார். அவர்கள் அளிக்கும் பதிலை ஒரு டைரியில் குறிப்பு எடுத்துக் கொள்கிறார். இதற்கு மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜோதித்ராதித்ய சிந்தியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

More articles

Latest article