உடல் எடையை குறைத்தால் கடுமையான நோய்கள் தாக்கும் அபாயம்

Must read

Exercise_Image
வாஷிங்டன்:
உடல் எடையை 5 முதல் 10 சதவீதம் வரை குறைக்கும் உடல் பருமனானவர்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் தற்போது உடல் பருமன் பிரச்னை பெரிய அளவில் உள்ளது. உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு செல்வது, வாக்கிங், ரன்னிங், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு உள்பட பல வழிகள் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு உடல் எடையை குறைப்பதன் மூலம் சிறிய அளவிலான பயன் மட்டுமே நம் உடலுக்கு கிடைக்கிறது என்றும், ஆனால், அதிக அளவில் உடல் நிலை பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவிந்துள்ளது.
அமெரிக்காவில் செயின்வ் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மனித ஊட்டச்சத்து மைய இயக்குனர் சாமுவேல் கிளெயின் கூறியதாவது:
உடல் பருமன் உள்ளவர்களுக்கு எடை குறைப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளபப்பட்டது. 32 முதல் 56 வயது வரையிலான 40 உடல் பருமன் ஆண் மற்றும் பெண்களின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை உடல் எடையை குறைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எடை குறைந்ததால் உடல் நலத்தில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன. லிவரின் இன்சுலின் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டது. கொழுப்பு மற்றும் தசை சிசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டன.
ஆனால் இவர்களுக்கு எதிர்காலத்தில் கடுமையான நோய் தாக்குதலுக்கான வாய்ப்புகள் இருககிறது. குறைந்தளவு சர்க்கரை மற்றும் இதய நோய்க்கு வாய்ப்புள்ளது. இத்துடன் புற்று நோய் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article