இளம்பெண்களை வாட்டும் ஐந்து நோய்கள்

Must read

women
பெண்கள் தினம் வந்து சென்று விட்டது.
இருந்தாலும் இந்தச் சமுதாயதில் பெண்கள் குறிப்பாகக் குடும்பத்தலைவிகளும், வேலைக்குச் செல்லும் பெண்களும் சந்திக்கும் உடல் உபாதைகள் ஏராளம். எனவே பெண்கள் தங்கள் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை தங்கள்ஆரோக்கியத்திற்கும் கொடுத்து முன்னெச்சரிக்கையாக இருந்து தங்களை பாதுகாக்கும் வரை அவர்களுக்குத் தொல்லைத் தந்து உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்கள்தாக்கிக் கொண்டே தான் இருக்கும்.
இளம்பெண்களை வாட்டும் கீழ்கண்ட ஐந்துநோய்கள் குறித்த விழிப்புணர்வை நாம் பெருவது அவசியம்.
புற்றுநோயை

பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது புற்றுநோயை

விட இருதயநோயினால் தான். இருந்தாலும் பல பேருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வரும்
வரை அதைப் பற்றிக் கடுகளவும் தெரிவதில்லை. ஈஸ்ட்ரோஜென் என்னும் பெண்களுக்கான ஹார்மோன் அவர்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆனால் மாதவிடாயைப் போலவே புகைப்பிடித்தல், நீரிழிவு, அசாதாரண இரத்த கொழுப்பு அமிலங்கள் ஆகியன இந்தப் பாதுகாப்பை முறித்து இருதய நோயை ஏற்படுத்துகின்றன. சாதாரணப் பெண்களை விடப் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளது.

ஆண்களைவிட, பெண்களுக்கு மாரடைப்பு வரும்போது அதை தவறாகக் கண்டுகொள்கிறார்கள், ஏனெனில் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் பெண்களுக்கு வருவதில்லை. அவர்களுக்குக் காய்ச்சல் வந்தது போல மிகவும் சோர்வாகவோ அல்லது மூச்சு திணறல் அல்லது குமட்டல்/வாந்தி அல்லது முதுகு, கை,தாடை ஆகிய ஒன்றில் வலி வரலாம். இதன் விளைவாகச் சிலருக்கு மாரடைப்புக்குப் பின்னர் வாழ்நாளை அதிகரிக்கும் பீடா பிளாக்கர்ஸ், ACE இஹிபிடர்ஸ், ஆஸ்பிரின் போன்ற உயிர் காப்பான்கள் கிடைக்கின்றது. 38% பெண்கள் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள் ஆண்களில் 25% பேர் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கிறார்கள்.
மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
14-breast-cancer-ribbon300
இந்தியப் பெண்களின் மரணத்திற்கு முக்கியக் காரணம் மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை வாய் புற்றுநோய் ஆகும். குறிப்பாக 1990-2013 வரை மார்பகப் புற்றுநோய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக “தி குளோபல் பர்டன் ஆஃப் கான்சர் 2013” வெளியிட்டுள்ளது. HPV யை எதிர்த்துத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது கர்பப்பை வாய் புற்றுநோயிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கின்றது. மேலும் 9-13 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக HPV தடுப்பூசி போடப்படுமென டெல்லி அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பெண்ணிற்கும் மார்பக புற்றுநோய் ஆபத்து வர 12% வாய்ப்புள்ளது ஆகவே எல்லா பெண்களும் கட்டாயமாக மார்பகத்தில் கட்டிகள் இருக்கிறதா எனத் தினமும் சுய பரிசோதனை செய்வது அவசியம். அதிலும் 45 வயதுக்கு மேல் பெண்கள் கட்டாயமாக மேமோகிராம் செய்ய வேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்தால் சிகிச்சையின் விளைவுகளை அதிகரிக்க முடியும் இருந்தாலும் சுய பரிசோதனை சாலச் சிறந்தது. வயதான பெண்களைவிட 40 வயதுக்கு கீழ் உள்ள பெண்களின் மார்பக திசுக்கள் அடர்த்தியாக இருக்கும் ஆகையால் அவர்களால் புற்றுநோய் முற்றும் வரை கட்டிகளை உணர இயலாது. மற்ற புற்றுநோய்களைவிட மார்பக புற்றுநோய் எளிதாகக் குணபடுத்தக்கூடிய ஒன்று, இருந்தாலும் இந்தியாவில் உள்ள பல பெண்களிடம் இதை முற்றிய நிலையில் தான் அடையாளம் காணப்படுவதால் மரணத்திற்கு வழி வகுக்கிறது.
இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்தின்மை
anemia
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்குப் பெண்கள் எடைக் குறைவாகவும் 12.8% பெண்கள் 145 செ.மீ.-க்கு கீழ் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 55% பேர் இரத்தச் சோகை உள்ளவர்களாகவும் இந்தியாவினுடைய “நேஷனல் ஃபேமிலி ஹேல்த் சர்வே 3” (2005-2006) கூறுகிறது. பல பிரசவ கால மரணங்கள், குறைப்பிரசவங்கள், எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகள், பிறக்கும் முன் இறக்கும் குழந்தைகள் என இரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். தாய்க்கு இரத்த சோகை இருந்தால் அது குழந்தையினுடைய மூளையையும் வளர்ச்சியையும் கருவிலேயே பாதிக்கும்.
இந்தக் குறைபாடு தீவிரமாக இல்லாமல் ஆரம்பகட்டமாக இருந்தால் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவை உட்கொண்டு ஹீமோகுளோபின் அளவை 13 கிராம்/dl விட அதிகமாக்கிக் கொள்ளலாம். இறைச்சி, பச்சை காய் கறிகள், கீரைகள், பட்டாணி, உலர் திரட்சை, அத்திப்பழம், பேரீட்சைப்பழம் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வைடமின் C உள்ள உணவு அதாவது எலுமிச்சை பழம் மற்றும் ஆரஞ்சு பழம் மற்றும் சாரு போன்றவற்றை உணவுடன் சேர்த்து இரும்புப் பாண்டங்களில் சமைக்கும்போது இரும்புச்சத்து உடலில் அதிகரிக்கின்றது.
ஆஸ்டியோபோரோஸிஸ்
Osteoporosis
பெரும்பாலான இந்திய பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் குறைவான எலும்பு எடை இருக்கின்றது. உலகில் ஆஸ்டியோபோரோஸிஸ் வரும் ஐந்தில் நாலு பேர் பெண்களாக இருக்கின்றனர், மாதவிடாயின் பொழுது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து எலும்பு எடை குறைய ஆரம்பிக்கிறது. அப்படி இருந்தும் கீழே விழுந்து அடிபடும்பொழுது எலும்புகளுக்கு ஆபத்து என்பது சில பெணகள் மட்டுமே உணர்கின்றனர். 55 வயதுக்கு மேல் மாதவிடாய் நின்ற 60.000 பெண்களில் பாதி பேருக்கு எலும்பில் வலியும் சோர்வும் ஏற்பட்ட போதும் கூடக் கை,கால்,முதுகெலும்பு,இடுப்பு போன்றவற்றில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவதில்லை. தங்கன்ளின் நடமாட்டத்தையே முடக்கும் நரம்பியல் வியாதிகளுள்ள பெண்கள் கூடத் தங்களை வருத்திக்கொள்வதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
மன அழுத்தம்
stress
இந்தியாவில் உள்ள பெண்கள் ஆண்களைவிட அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் . சமூதாயத்தில் நிலவும் பாலின சமத்துவமின்மையால், கேலிப்பேச்சு மற்றும் குடும்ப வன்முறையால் அவர்களின் இந்த நிலைமை சரியாகக் கவனிக்கப் படாமலும் பெரும்பாலும் தவறாகவும் புரிந்துக்கொள்ளப் படுகின்றது.
பெண்களின் மனநிம்மதி குறித்த அலட்சியப் போக்கிற்கு முக்கியக் காரணியாய்த் திகழ்வது பெண்ணடிமைச் சமூகம் ஆகும். இதனால் ஒவ்வொரு பிரச்சனைகளிலும் இளம்பெண்கள் உதவியின்றி நொந்துபோய் நிர்கதியாக எண்ணுகின்றனர். உலகின் மற்ற நாடுகளில் இளம்பெண்களைவிட மூன்று மடங்கு அதிகமாக இளைஞர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் வேளையில் , இந்தியாவில் இளைஞர்களைவிட அதிகமாக இளம்பெண்கள் தற்கொலைச் செய்துகொள்கின்றனர் எனும் செய்தி கவலையளிக்கக் கூடியது.
பாலின சமத்துவமின்மையால் ஏற்படும் மனவழுத்தம் உலகெங்கிலும் சகஜமாய் கானப்படுகின்றது. சமமான படிப்பு மற்றும் அனுபவம் கொண்ட 22,000 பெண்கள் மற்றும் ஆண்களைக்கொண்டு நடத்தப் பட்ட ஆய்வில் கணவனைவிடக் குறைவாய் சம்பாதிக்கும் பெண்கள் 2.5 மடங்கு அதிகமாய் மனவழுத்தத்திற்கும், நான்கு மடங்கு பொறுமையின்மையாலும் பாதிக்கப் படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கணவனைவிட அதிகமாகச் சம்பாதிக்கும் பெண்களும் இதே அளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
 

More articles

1 COMMENT

Latest article