beeethovan

 

உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய இசை மேதை லுட்விக் வான் பீத்தோவன் 1770ம் ஆண்டு இதே தினத்தில்தான் பிறந்தார்.

இவரது தாத்தா, தந்தை, பெரிய அண்ணன் என்று குடும்பத்தில் பலரும் இசைக்கலைஞர்கள். முதலில் தந்தையிடம் இசை பயின்ற பீத்தோவன், தொடர்ந்து பல பிரபல கலைஞர்களிடம் இசை பயின்றார்.

பியானோ மற்றும் வயலின் இசைப்பதில் சிறந்து விளங்கினார். தனது 17ம் வயதில் இசை நிகழ்ச்சி நடத்த மேற்கத்திய இசைக்குப் பிரபலமான வியன்னாவுக்கு சென்றார். ‘சிம்பொனி இசையின் தந்தை’ என்று போற்றப்பட்ட ஜோஸப் ஹைடனிடம் இசை பயின்றார்.

பல மாணவர்களுக்கு பியானோ இசை கற்பித்தார். 27 வயதில் இவரக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் முற்றிலுமாக காது கேட்காமல் போனது. ஆனால் அதற்கு முன்பாகவே மிகச் சிறந்த பல சிம்பொனி இசை வடிவங்களை உலகுக்கு வழங்கிவிட்டார் பீத்தோவன்.

இசைத் திறமை காரணமாக, தன்னை மிக உயர்த்திக்கொண்டதோ, இசைக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்புபடுத்தியதோ இல்லை.. பீத்தோவன் என்பது குறிப்பிடத்தக்கது!