இன்று: மே 10

Must read

1
ஆ.ராசா பிறந்தநாள்
2ஜி வழக்கால் உலக அளவில் பிரபலமாகிவிட்ட ஆ. ராசா  1963ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார்.   மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர்,  மத்தியதகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நடுவண் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் “2 ஆம் தலைமுறை அலைவரிசை” ஓதுக்கீடு செய்ததில் ஆ.ராசாவின்  பொறுப்பில் இரந்த தகவல்தொடர்புத்துறை அமைச்சகம், பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளது.  அலைக்கற்றை ஒதுக்கீட்டை பகிரங்கமாக ஏலம் விடாததால்  மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று  கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர்க்கட்சிகளின் தீவிர முயற்சியால் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. சிபிஐ விசாரணைக்குப் பின் 2011, பெப்ரவரி 2, அன்று சிபிஐ இவரைக் கைது செய்தது
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக ஆ. ராசா மீது சிபிஐ 20 ஆகஸ்டு 2015 அன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்குகளை எதிர்கொண்டுவரும் இவர், தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
2
 
நமிதா பிறந்தநாள்
பிரபல நடிகை நமிதா  1981ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார் தமிழ் மொழியில் மட்டுமன்றி  கன்னடா,தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்ற இவர், . குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த இவரது முழுப்பெயர் நமிதா கபூர். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். தமிழில் இவர் நடித்த முதல் படம் ‘எங்கள் அண்ணா’. எரிக் மேனிங் இயக்கிய ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார். நமிதாவிற்கு நீச்சல் மற்றும் பேட்மிட்டன்விளையாடுவது மிகவும் பிடித்தமானது.  அவர் சிறிது காலம் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி  நடனப்போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக வந்தும் புகழ் பெற்றார்.
சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளார்.
 
 

More articles

Latest article