download
 
மேண்டலின் சீனிவாஸ், பிறந்த தினம்
1969ம் ஆண்டு,  இதே தினம்… ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலக்கோல் நகரில் பிறந்த சீனிவாஸ், சிறு வயதிலியே இசையில் நாட்டமுள்ளவராக விளங்கினார்.  தனது ஆறாவது வயதில் தந்தை சத்தியநாராயணாவின் மாண்டலின் இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கினார்.  இதைக் கண்டு இவரது தந்தை இவருக்கு மாண்டலின் இசைக்கருவியை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தார்.
இவரது இசையின் மூலாதாரம் கருநாடக இசை ஆகும். இவர் இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளின் முன்னணி இசைக் கலைஞர்களுடன் (ஜாண் மெக் லெளக்லின், மைக்கேல் நெய்மென் மற்றும் மைக்கேல் ப்ரூக்) இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
1998 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.. தமிழக அரசு கலைமாமணி விருது அளித்தது. 2010 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.
உடல்நலக் குறைவு காரணமாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம்  தேதி, சீனிவாஸ் சென்னையில் காலமானார்
raj
 
ராஜேந்திர பிரசாத் நினைவு தினம்
1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் இராஜேந்திர பிரசாத்,  1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இவர்  பதவியேற்றார்.
1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.
இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது.
 
india5
பிரிட்டிஷ் படைகள் முற்றிலுமாக வெளியேறிய தினம்
1947 – ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா விடுதலை ஆனபோதும் இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படைகள் உடனடியாக வெளியேறவில்லை. இந்தியாவின் பாதுகாப்பிற்கான பொறுப்பை முழுமையாக இந்தியாவின் சுயேச்சை ராணுவம் ஏற்றுக்கொள்ளும் வரை இங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்ட . பிரிட்டிஷ் படைகளின் கடைசி குழு  1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வெளியேறியது.
 
 
cv_raman_2322003f
தேசிய அறிவியல் நாள்
இந்திய விஞ்ஞானி சர் சி.வி.ராமன், “ஒளியியல் கோட்பாட்டில் முக்கியமானதொரு விஷயத்தைக் கண்டுபிடித்தார். “ஒளி என்பது திரவம், வாயு மற்றும் கெட்டியான பொருட்களின் ஊடே செல்லும்போது, அதன் தன்மை மாறுபடுகிறது” என்று ராமன் கண்டறிந்தார்.   “ கேரம்போர்டில் ஸ்டிரைக் கரைச் சுண்டியதும், போர்டில் உள்ள பல்வேறு காய்கள் சிதறி வெவ்வேறு திசை நோக்கி நகர்வதைப்போல ஒளியின் பயணம் மாறுபடுகிறது” என்று கூறினார். இதையே ‘ராமன் விளைவு’ என்று அழைக்கிறோம்.
சி.வி. ராமனின் இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930-ல் அவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இப்படி ராமன் விளைவை அவர் கண்டுபிடித்த நாள் இன்று. இந்த நாள் தேசிய அறிவியல் நாளாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.