இன்று: பிப்ரவரி 21

Must read

2
 
எம். ஆர். ராதா பிறந்தநாள் (1907)
 தமிழ்த் திரையுலகின்  முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராகவும்,  மேடை நாடக நடிகராகவும் உலா வந்த எம்.ஆர். ராதா, அரசியலிலும் முத்திரை பதித்தவர்.
சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார்.
நாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவரை காதலித்து மணந்து கொண்டார். தனது மகனுக்கு தமிழ்ப்பற்றின் காரணமாக தமிழரசன் என்று பெயரிட்டார் எம்.ஆர். ராதா.  அம்மை நோயினால் பிரேமாவதியும் தமிழரசனும் சில ஆண்டுகளஇல் இறந்துவிட்டார்கள். அதன் பிறகு அவர் மறுமணம் செய்து கொண்டார்.   எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, மகள்களான ராதிகா மற்றும் நிரோஷாஆகியோர்  எம். ஆர்.ராதாவின் வாரிசுகள் ஆவர்.
1967, ஜனவரி 12 அன்று எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில்தண்டனை பெற்ற இராதா 1967 பிப்ரவரி 12 ஆம் நாள் முதல் 1971 ஏப்ரல் 27 ஆம் நாள் முதல் சிறையில் இருந்தார். அப்பொழுது இராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை,  திராவிடர் கழக தலைவர்  ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் எம்.ஆர். ராதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார்.
திராவிடர் கழகத்தில் உறுப்பினர் ஆகாவிட்டாலும், அதன் கருத்துக்களை பரப்பினார். அவரது பேச்சுக்கள் இன்றளவும் புகழ் பெற்றவயாக விளங்குகின்றன.
தனது நாடகங்களுக்கு பலவித தடைகள் வந்தபோதும்,  அதை எதிர்த்து நின்று புரட்சிகர கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
.1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி ராதா மறைந்தார். . அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்பினார். ஆனால் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
 
3
பன்னாட்டு தாய்மொழி நாள்
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசு  மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக   உலகளாவிய முறையில்  கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) அமைப்பு  1999ம் ஆண்டு  இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது.
பல்வேறு சமூகங்களின் மொழி,பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் காப்பதுடன்  அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்குவதும் இந்த நாள கடைபிடிப்பதன் நோக்கமாகும்.
 4
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியீடு
1848ம் ஆண்டு, இதே நாளில்தான்,- கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். நவீன  உலகில் அதிகமாக படிக்கப்பட்ட  நூல் கம்யூனிஸ்ட் அறிக்கை.ஆகும்-. “பூர்ஷ்வா வர்க்கத்தை தூக்கி எறிவது, பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியை ஏற்படுத்துவது, வர்க்கப் பகைமைகளை அடிப்படையாகக் கொண்ட பழைய பூர்ஷ்வா சமுதாயத்தை ஒழித்துக்கட்டி வர்க்கங்களற்ற, தனிச் சொத்துடைமை அற்ற ஒரு புதிய சமுதாய்ததை நிறுவுவது…” …இவையே கம்யூனிஸ்ட் அறிக்கையின் உள்ளடக்கமாகும்.
 
 
 
 
 
 

More articles

Latest article