z

சார்லி சாப்ளின் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பன் முகங்கள் கொண்டவர்.

ஆனால் இவரது வெளிவராத முகம்.. வருத்தத்தை ஏற்படுத்துவது. ஆமாம்..

இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட முறையற்ற வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இவர் செய்து கொண்ட, தொடர் திருமணங்கள்..

தனது இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டது. பின்னர் இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

தனதுமுப்பத்தி ஐந்து வயதில் பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்ததது. லீடாவுக்கு அந்த காலத்திலேயே 8,25,000 டாலர் கொடுத்து விவாகரத்து செய்தார்.

இந்த விவாகரத்து வழக்கு முடிவடைந்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க (மோசமான) நடவடிக்கைகள் வெளிவாகின. இதனால் இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன.

பிறகு தனது நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ரகசியமாக மணமுடித்தார். இதுவும் சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது.

இந்த காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், இதுவும் சிலகாலமே தொடர்ந்தது. சாப்ளின் விலகினார். ஜோன் பேரி, தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார்

பிறகு குறுகிய கால இடைவெளியில் ஓனா ஓ’நீலை மணமுடித்தார். அப்போது சாப்ளினுக்கு வயது 54, ஓ’நீலின் வயது 17.

ஆனால் இந்தத் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைதைகள் பிறந்தனர்.