இன்று சத்ய சாய்பாபா பிறந்தநாள்
baba1
சத்ய சாய்பாபா 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தை பெயர் ராஜு ரத்னாகரம், தாயார் பெயர் ஈஸ்வரம்மா.
இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் சத்ய சாய்பாபா. ஆனால், குழந்தைக்கு பெற்றோர்கள் சூட்டிய பெயர். சத்ய நாராயண ராஜு.  சிறு பருவத்திலேய சாய்பாபா எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
 
நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல், என தொட்ட துறைகளில் எல்லாம் பிரகாசமாக இருந் தார்.   
1940-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி சாய்பாபா தனது சகோதரருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரை தேள் கொட்டி விட்டது.  இதன் காரணமாக அவர் தன்னிலை மறந்தார். அதன் பிறகு அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டது.
அவ்வப்போது தானாகவே  சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்ற அவரது வாழ்க்கை முறை பரிகாசமானதாக அமைந்தது. இதனால் பயந்துபோன பெற்றோர்கள் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றனர்.
மருத்துவர்களோ சாய்பாபாவை பரிசோதித்து விட்டு நரம்பு தளர்ச்சி நோய் தாக்கி இருப்பதாக கூறி சிகிச்சை அளித்தனர். ஆனால் எந்த மாற்றமும் இல்லை.
பின்னர் மத குருக்கள், சாமியார்களிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பலன் கிடைக்கவில்லை. 
baba-spl   
இந்த நிலையில் 1940-ம் ஆண்டு மே 23-ந் தேதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் கற்கண்டை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 
ஆனால், அவரது  தந்தை ராஜு ரத்னகரம் கோபம் அடைந்து “ஏன் இப்படி மாய மந்திர வேலை செய்கிறாய்” என்று கூறி திட்டினார்.
அப்போதுதான்,  சாய்பாபா நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார்.
 
சத்ய சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்புதான் சீரடி சாய்பாபா இறந்திருந்தார்.  
இந்த நிலையில் சத்யசாய்பாபா நான் தான் சீரடி சாய்பாபாவின் மறுபிறவி என்று அவர் கூறியதால் அனைவரும் வியப்படைந்தனர். 
 
தனது 14ஆம் வயதில் தன்னை ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவின் மறுபிறவி என்று கூறியதுடன், ஷிர்டி பாபாவின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை தெள்ளத் தெளிவாக நினைவு கூர்ந்து, பாபாவுடன் தொடர்பில் இருந்த பலரைச் சந்தித்து தான் ஷிர்டி பாபாவின் மறுபிறவிதான் என்பதை நிரூபித்தார்.
தங்களது உடல்தான் வேறு வேறு என்றும் ஆன்மா ஒன்றுதான் என்றும் கூறினார் பாபா.
மேலும் தான் பிறந்து சத்திய யுகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வெங்கோபா போன்ற பல யோகி களும், பரத்வாஜர் போன்ற பல முனிவர்களும் பிரார்த்தனை செய்து கொண்டதால்தான் தன் அவதாரம் நிகழ்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்படியானால், கிருஷ்ண சக்தியோடு உலகில் தோன்றியிருப்பதாக நம்பப்படும் ஸ்ரீ அரவிந்தர் யார் என்று ஒரு பக்தர் கேட்டதற்கு பாபா,
“அவதாரம் நிகழும் பொழுது அவனது அடியார்களும் அவருடனோ அல்லது அதற்கு முன்போ பிறந்து அதற்கு ஆயத்தமாகச் சில செயல்களைச் செய்ய வேண்டி வரும். அப்படி எனது சக்தியின் உயிர்ப்புடன் புவியில் தோன்றியவர்தான் அரவிந்தர் என்றும், எனது அவதாரம் துரிதமாக நிகழ்வதற்கான பணிகளை அவரும், வெங்க அவதூதர் போன்ற பல யோகிகளும் முன்னரே பிறந்து, புவியில் செயல்பட்டனர் என்றும் தெரிவித்தார். தனக்கு உதவியாளராக இருந்த கஸ்தூரி யசோதையின் அவதாரம் என்றும் பாபா குறிப்பிட்டார்.
மேலும் அவர், “இது போன்ற விஷயங்கள் உங்களது விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்டது. சாதாரண புலன்களால் இதுபோன்ற விஷயங்களை ஆராய இயலாது” என்றும் குறிப்பிட்டார்.
எங்கே விஞ்ஞானம் முடிவுறுகிறதோ அங்கே மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது என்பது பாபாவின் கூற்று.
sai-avathar
சத்ய சாய்பாபாவாக வாழ்ந்து தன் அவதாரத்தை நிறைவு செய்த பாபா அடுத்து பிரேமசாயியாக அவதாரம் எடுக்க இருக்கிறார். அதை அவரே ஒரு சில பக்தர்களிடம் கூறியுமிருக்கிறார்.
 குறிப்பாக தனது உதவியாளராக இருந்த கஸ்தூரியே மறுபிறவியில் தனது தாய் என்றும் பாபா அறிவித்துள்ளார். ஒரு வெளிநாட்டு பக்தருக்கு ”பிரேம சாயி” உருவம் பொறித்த மோதிரத்தையும் வழங்கியுள்ளார்.
கர்நாடக மாவட்டம் மாண்டியாவில் உள்ள குணபர்த்தியில் பிரேம சாயி அவதாரம் நிகழும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. 2030 வாக்கில் அவருடைய அவதாரம் வெளிப்படும் என்று பக்தர்கள் நம்புகிறன்றர். ”பிரேம சாயி” அவதாரம் ’சக்தி’ அம்சத்துடன் கருணை உள்ளம் கொண்டதாக விளங்கி, மானுடத்தை உயர்த்தும் என்றும் பாபா, முன்பு தன் பக்தர்களிடம் தெரிவித்துள்ளார்.